அண்ணாதுரை – கருணாநிதி – ஸ்டாலின் – உதயநிதி தலைமுறைகள் மாறினாலும் மாறாத திமுகவின் அந்தர் பல்டி அரசியல் !

அண்ணாதுரை – கருணாநிதி – ஸ்டாலின் – உதயநிதி தலைமுறைகள் மாறினாலும் மாறாத திமுகவின் அந்தர் பல்டி அரசியல் !

Share it if you like it

திமுகவின் இளைஞர் அணி செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் பொறுப்பில் இருப்பவர் உதயநிதி ஸ்டாலின் . இவர் திமுகவின் தற்போதைய தலைவரும் முதல் வருமான ஸ்டாலினின் மகன் . திமுகவின் எதிர்கால தலைமைக்கு முன்னிறுத்தப்படும் சமகால இளவரசர். அவ்வகையில் கட்சியில் எல்லா வகையிலும் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக உதயநிதியை முன்னிறுத்தியே உடன்பிறப்புகள் கொண்டாடுவார்கள். இவர் முன்னாள் முதல்வரும் திமுகவின் நீண்ட கால தலைவர் பொறுப்பில் இருந்த வருமான கருணாநிதியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவில் கருணாநிதி தொடங்கி வைத்த குடும்ப வழி அரசியல் பரம்பரை அரசுரிமை வழியில் தாத்தா கருணாநிதி அவருக்கு அடுத்து அவரது மகன் ஸ்டாலின் அவரது வழியில் இன்று ஸ்டாலினின் மகன் உதயநிதி என்று மூன்று தலைமுறைகள் திமுகவின் கட்சி தலைமையிலும் தமிழகத்து அரசியல் ஆட்சி அதிகாரத்திலும் அதிகாரத்திலும் கோலோச்சி வருகிறது.

திமுகவும் இந்து இந்திய விரோதமும் பிரிக்க முடியாத இரட்டைப் பிறவிகள் . மாற்று மதம் நம்பிக்கைகள் என்று வரும்போது மத சுதந்திரம் என்று பேசுவதும் . சனாதன தர்மம் சனாதனிகளின் வாழ்வியல் என்று வரும்போது பகுத்தறிவு முற்போக்கு வாதம் என்று பேசுவதும் திமுகவின் இரட்டை அரசியல் இயல்பு . இவர்களின் ஒரே இலக்கு இந்த சனாதன தர்மமும் அதன் வழியில் வாழும் மக்களின் பண்பாடு கலாச்சாரமும் சிதைக்கப்பட வேண்டும். அதன் மூலம் இங்கு கலாச்சார சீரழிவும் அந்நிய மத திணிப்பும் அரங்கேற வேண்டும் என்பது மட்டுமே. அரை நூற்றாண்டு காலமாக மாநில ஆட்சி அதிகாரத்திலும் மத்தியில் கூட்டணி ஆட்சியாகவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிகாரம் செலுத்தும் காலங்களில் எல்லாம் திமுக முன்னெடுப்பதெல்லாம் இந்து விரோதம் இந்திய விரோதம் மட்டுமே. அதன் வெளிப்பாடுதான் சேது சமுத்திரத் திட்டம் கொண்டு வந்ததுஇமுதல் அயோத்தி ராமஜென்ம பூமி விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிப்பது வரை தேசிய அளவில் செய்யும் இந்து விரோதம்.

மாநிலத்தில் இந்து அறநிலையத்துறை என்ற பெயரில் இந்து ஆலயங்கள் அபகரிக்கப்பட்டு ஆகமங்கள் வழிபாட்டு முறைகள் ஆலயங்கள் சிதைக்கப்படுவது மதசார்பற்ற மாநில அரசு என்ற பெயரில் பெரும்பான்மை மக்களுக்கு விரோதமாகவும் வாக்கு வங்கி அரசியலுக்காக சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாகவும் செயல்படும் வஞ்சக அரசியலில் அடையாளம். எல்லாம். இதன் தொடர்ச்சியாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த நாள் முதல் அதன் இந்து விரோதமும் இந்திய விரோதமும் ஒவ்வொரு அசைவிலும் வெளிப்பட்டது. திமுகவின் தாய் அமைப்பான தீகவின் ஆதரவு அமைப்பான முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு முன்னெடுக்கப்பட்டது. அதில் சிறப்பு அழைப்பாளராக உதயநிதி மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் அழைக்கப்பட்டு இருந்தார்கள். இம் மாநாட்டுக்கு முழு அனுமதியும் பாதுகாப்பும் தமிழக அரசின் மாநில காவல்துறை மூலம் வழங்கப்பட்டிருந்தது. இம் மாநாட்டில் பங்கேற்று பேசிய உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் இருவரும் சனாதன தர்மத்தை அழிப்பதில் முழுமையாக உடன்பட்டு இம்மாட்டிற்கும் அதன் ஏற்பாட்டாளர்களுக்கும் முழுமையான ஆதரவையும் கருத்துக்களையும் பகிர்ந்து இருந்தார்கள். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்தது. திமுக சார்ந்திருந்த ஐஎன்டிஐஏ கூட்டணியிலேயே பலத்த எதிர்ப்பும் விமர்சனங்களும் எழுந்தது. வட இந்தியாவில் பெரும் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் வெடித்தது. அவை ஐஎன்டிஐஏ கூட்டணியை சனாதன தர்மத்திற்கு எதிரான கூட்டணியாக அடையாளப்படுத்தியதில் கூட்டணி கட்சிக்காரர்களே திமுகவிற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தார்கள்.உள்துறை அமைச்சர் அமித்ஷா உதயநிதியின் பேச்சு சனாதன ஒழிப்பு மாநாட்டை கண்டித்ததோடு சட்ட நடவடிக்கை தேவை என்று பேசினார்.

இவ்வளவு நிகழ்ந்த பிறகும் தனது தவறை உணராத உதயநிதி இந்த காவிகளின் மிரட்டலுக்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன். நான் அண்ணா கலைஞர் வழியில் வாழ்பவன் . திமுக என்ற இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதே சனாதன தர்மத்தை ஹிந்து தர்மத்தை அழிக்க வேண்டும் என்ற இலக்கில் தான். எங்களுக்கு ஆட்சியே பறிபோனாலும் கவலை இல்லை . சனாதன எதிர்ப்பு என்பதில் உறுதியாக இருக்கிறேன். டெங்கு கொரோனா மலேரியா போல சனாதனமும் அழிக்கப்பட வேண்டியது . அதற்கு அனைவரும் ஒருமித்த கருத்தோடு இணைந்து போராட வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருந்தார். இதை அடுத்து பிரதமர் மோடி கோபாலில் பேசும்போது ஐஎன்டிஐஏ கூட்டணியினர் சனாதனத்திற்கு எதிரானவர்கள். அவர்கள் தங்களின் தாக்குதலை சனாதனிகள் மீது தொடங்கிவிட்டார்கள். சனாதனிகள் அவர்களிடமிருந்து கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.

உதயநிதியின் பேச்சுக்கும் திமுகவின் சனாதன ஒழிப்பு மாநாட்டிற்கும் எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் காஷ்மீரின் கீழமை நீதிமன்றம் உதயநிதிக்கு எதிராக கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருந்தது . உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பெரும்பான்மை சமூக மக்கள் பின்பற்றும் தர்மத்துக்கு எதிரான மாநாட்டிற்கு அனுமதி கொடுத்தது . அதில் மாநில அமைச்சர்கள் பங்கேற்றது குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. ஒரு மதத்திற்கு எதிரான மாநாட்டில் பங்கேற்றதும் மத தேசத்தை பேசியதும் குறித்து விளக்கம் அளிக்க தமிழகத்தின் விளையாட்டு இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இருவருக்கும் தனித்தனியே நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

தமிழகத்தில் இந்து முன்னணி அமைப்பு சார்பில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் மக்கள் பிரதிநிதியாக இருக்கும் உதயநிதி பங்கேற்றது மாநாட்டில் சனாதன தர்மத்திற்கு எதிராக பேசியது உள்ளிட்டவற்றை மேற்கோள் காட்டி கோ வாரண்டோ வழக்கை பதிவு செய்து இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு பற்றிய கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின் நான் தனி மனிதன் என்ற வகையில் தான் சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று சனாதன ஒழிப்பு பற்றி பேசினேன் . தவிர அமைச்சர் என்ற முறையில் பங்கேற்கவோ அமைச்சர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி சனாதன ஒழிப்பு பற்றி பேசவோ இல்லை . அதனால் இந்து முன்னணி அமைப்பினர் பதிவு செய்திருக்கும் கோ வாரண்டோ வழக்கை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொள்வேன் என்று பேசி இருக்கிறார் ‌.

இதன் மூலம் அவர் பொதுவெளியில் தனது தனிப்பட்ட முறையில் சனாதன எதிர்ப்பு ஒழிப்பு பற்றிய நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை உறுதி செய்திருக்கிறார். மேலும் தனி மனிதனாகத்தான் சனாதன ஒழிப்பை முன்னெடுப்பதாகவும் ஒப்புக்கொண்டிருக்கிறார் . அமைச்சர் என்ற பதவியில் அதிகாரத்தில் இருந்து பேசவில்லை என்று விளக்கமும் கொடுத்திருக்கிறார். ஆனால் சனாதான ஒழிப்பு மாநாட்டின் ஆவணங்கள் மேடை நிகழ்வுகள் அனைத்திலும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி என்று தான் அழைப்பும் விடுக்கப்பட்டிருக்கிறது. ஆவணங்கள் அப்படித்தான் குறிப்பிடுகிறது. இதை ஒட்டுமொத்தமாக மறைத்து இந்து முன்னணி சார்பில் தொடங்கப்பட்ட வழக்கு அதன் மூலமாக நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் தனது சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் பதவியை பாதுகாத்துக் கொள்ளவும் பொதுவெளியில் அப்பட்டமாக உதயநிதி பல்டி அடித்துப் பேசி இருப்பது கடும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது .

திமுகவின் வரலாற்றில் பல்வேறு விஷயங்களில் மேடைகளில் பெரும் வீராவசத்தோடு பேசுவதும் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் என்று பெரும் கலவரத்தை தூண்டுவதும் அதன் பிறகு நீதிமன்றங்கள் சட்ட நடவடிக்கைகள் என்று வரும்போது அப்படியே தலைகீழாக பேசுவதும் அந்த கட்சிக்கும் தலைவர்களுக்கும் புதிதல்ல. இது தமிழகத்தின் அரை நூற்றாண்டு கால அரசியலை கடந்து வந்தவர்களுக்கு எளிதாக புரியும். தனி தமிழ்நாடு கோரிக்கை என்று மேடையில் பேசுவதும் பிறகு மாநில சுயாட்சி தான் கேட்டோம் என்று கட்சியை காப்பாற்றிக் கொள்ள காப்பாற்றிக்கொள்ள பின் வாங்கியதும் அண்ணாதுரை காலத்து திமுக மரபு. தனித்தமிழ் ஈழம் தனித்தமிழ் ஈழம் அகண்ட தமிழ் ஈழம் என்று மேடையில் பேசுவதும் தனது திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் சிக்கல் வரும் என்று தெரிந்தால் நாங்கள் மாநில சுயாட்சியை மட்டும் தான் பேசினோம். இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு குறைந்தபட்ச உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற மனிதாபிமான அடிப்படையில் தான் கோரிக்கை விடுத்தோம் என்று பேசுவதும். மேடையில் டெஸோ மாநாடு தீர்மானம் நிறைவேற்றுவதும் பிறகு நானே ஒரு அடிமை இதில் நான் எங்கே தமிழ் ஈழ மக்களுக்கு விடுதலை பெற்று தர முடியும்? என்று பல்டி அடிப்பதும் கருணாநிதி காலத்து திமுக மரபு.

மேடைக்கு மேடை சனாதன அழிப்பு மாநாடு எதிர்ப்பு மாநாடு சிறுபான்மை மேடைகளிலும் திருமண நிகழ்ச்சிகளிலும் கூட போகும் இடங்களில் எல்லாம் இந்து தர்மம் அதன் வழிபாட்டு முறைகள் வாழ்வியல்களை தரம் தாழ்ந்து விமர்சிப்பதும் கொச்சைப்படுத்தி பேசுவதும் பிறகு தேர்தல் என்று வருமானால் திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி இல்லை. திமுகவில் இருப்பவர்கள் தொண்ணூறு சதம் இந்துக்கள் தான். திமுகவை இந்துக்களுக்கு எதிரான கட்சியாக கட்டமைக்க பாஜக உள்ளிட்ட கட்சிகளும் இந்து அமைப்புகளும் முயற்சி செய்கிறது என்று பேசுவதும் ஸ்டாலின் காலத்து மரபு. அவ்வகையில் அவ்வகையில் நான் அண்ணாவின் வழியில் கலைஞரின் வழியில் வாழ்பவன் என்று முன்பே உதயநிதி குறிப்பிட்டது போல அவர்களின் வழியில் ஆட்சியை போனாலும் கவலையில்லை. சனாதன எதிர்ப்பில் சமரசம் இல்லை என்று ஒரு மாதம் முன்பாக வீராவேசம் பேசியவர் இன்று அமைச்சர் பதவிக்கும் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கும் சிக்கல் வரும் என்று தெரிந்த போது நான் தனி மனிதனாகத்தான் சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று பேசினேன் தவிர அமைச்சராக இல்லை என்று பல்டி அடிப்பதும் தனது வம்சாவழியில் மீண்டும் ஒருமுறை அவர் நிரூபித்திருக்கிறார். இதன் மூலம் தனது கட்சியின் வரலாற்றுப் பெருமையையும் குடும்பத்தின் பாரம்பரிய பெருமையையும் அவர் நிலை நிறுத்தி இருக்கிறார்


Share it if you like it