தமிழகத்தில் பாமக இதுவரை திரவுபதி அம்மன் ஆலய வழிபாடு சித்திரை முழுநிலவு கொண்டாட்டம் என்று ஆன்மீக வழியில் வன்னிய மக்களை ஒன்றிணைத்தாலும் திமுகவின் இந்து விரோதத்தை கண்டித்ததில்லை. வன்னிய சமூக மக்கள் வாக்கு வங்கி தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மை மட்டுமே இருந்தது. அதுதான் இன்று ஈவேரா பாசம் என்ற பெயரில் பாஜக எதிர்ப்பாக வெளிவருகிறது. ஆனால் இது மேலும் பாஜகவிற்கு ஆதரவு அலையையே ஏற்படுத்தும். திமுகவின் ஒட்டுமொத்த இந்து இந்திய விரோத அரசியலை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் களத்தில் இறங்கும்போது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு வன்னிய சமூகத்திடம் பெரும் ஆதரவு பெருகுகிறது. மேலும் தங்களின் ஆலயங்கள் பாதிக்கப்படும் போதும் தங்களின் பண்பாடு கலாச்சாரங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போதும் தங்களுக்கு துணையாக வெளிப்படையாக களத்தில் இறங்குவது இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகளும் பாஜக உள்ளிட்ட இந்து ஆதரவு கட்சியினரும் மட்டுமே என்பதை சமகாலத்தில் எல்லா சமூக மக்களைப் போலவும் வன்னிய சமூக மக்களும் உணரத் தொடங்கி விட்டார்கள்.
அதன் காரணமாக அவர்களை பெரும்பாலானவர்கள் வன்னியர் என்பது சாதிய அடையாளம் பாரதியன் என்பது தேசிய அடையாளம். இந்த இரண்டும் பாதுகாக்கப்பட வேண்டும் எனில் அதற்கு ஆர்எஸ்எஸ் பாஜக போன்ற தேசிய அமைப்புகளும் கட்சிகளும் மட்டுமே தேவை என்ற ரீதியில் அவர்கள் அனைவரும் ஒரு தேசிய எழுச்சியோடு தமிழக பாஜகவை நோக்கி நகரத் தொடங்கி விட்டார்கள். இந்த அடி நாதத்தை உணர்ந்து கொண்டதால் தமிழகத்தில் பாஜக தலைவரின் வளர்ச்சியும் அவரது தலைமையில் ஒட்டுமொத்தமாக தமிழக மக்கள் தேசிய எழுச்சியில் திரள்வதையும் தடுத்து நிறுத்தாவிட்டால் எதிர்காலத்தில் பாமக போல கட்சிகளுக்கு தமிழகத்தில் இடம் இருக்காது என்று அன்புமணி தனது இருப்பை நிலை நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். ஆனால் தமிழக பாஜக தலைவரை விடவும் அதிகமான வாய்ப்புகள் பாமகவிற்கும் அன்புமணி ராமதாசுக்கும் கடந்த காலங்களில் எவ்வளவோ கிடைத்தது.
அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி குறைந்தபட்சம் வன்னிய மக்களின் வழிபாட்டுத் தலங்கள் தமிழகத்தில் இருக்கும் இந்து இந்திய விரோதத்தை எதிர்த்து அரசியல் செய்திருந்தாலே பாமக என்று எவ்வளவோ ஆழமாக வேறொன்றி இருக்க முடியும். ஆனால் திமுக என்ற பெரும் கட்சியோடு மறைமுகமாக எப்போதும் ஒரு கூட்டணியில் இருக்கும் காரணம் அவர்களின் ஒட்டுமொத்த இந்து இந்திய விரோதத்தையும் கண்டும் காணாமல் போக வேண்டிய நிர்பந்தம் பாமகவிற்கு இருந்தது. ஆனால் தமிழக பாஜகவிற்கு அது போல் எந்த நிர்பந்தமும் இல்லை. அதனால் அதன் தலைவர் வெளிப்படையாக திமுகவின் இந்திய விரோதத்தை எதிர்த்து களம் காண்கிறார். வேறு வழி இன்றி திமுகவிற்கும் திக்காவிற்கும் தனது விசுவாசத்தை காண்பிக்கவும் தமிழக பாஜக வளர்ச்சியை தடுத்து தமிழக பாஜக தலைவருக்கு எதிர் அரசியல் செய்யவும் வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் பாமகவும் அதன் தலைமையும் தங்களின் திராவிட பாசத்தையும் இந்து துவேஷத்தையும் வெளிப்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள்.
இதன் மூலம் இவர்களின் அரசியல் எல்லாம் சாதிய அடையாளத்தோடு ஒரு குறுகிய வட்டத்திற்குள் செய்யப்படும் அதிகார பலம் கொண்ட அரசியல் தேவைக்கான வாக்கு வங்கி அரசியல் மட்டுமே என்பதை நிரூபித்து இருக்கிறார்கள். மற்றபடி வன்னிய மக்களின் வழிபாட்டுத் தலங்கள் தொடங்கி தமிழகத்தில் இருக்கும் இந்துமத ஆலயங்கள் வழிபாட்டுத் தலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதோ அபகரிக்கப்படுவதோ அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவது பற்றியோ இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. அவற்றை கைப்பற்ற திட்டமிட்டு களமிறங்கும் மாற்று மத அமைப்புகள் கட்சிகள் அதை ஆதரிக்கும் திமுகவின் நிலைப்பாடு அதிமுகவின் மறைமுக ஆதரவு பற்றி எல்லாம் இவர்களுக்கு அக்கறை இல்லை . ஆனால் அதை எல்லாம் எதிர்த்து தமிழக பாஜக தலைவர் பேசினாலோ அல்லது அதை மீட்கும் வழியில் களம் இறங்கினாலும் அதை எதிர்த்து பாமக களம் இறங்கும். எனில் பாமக என்னும் கட்சி யாருக்கானது? அதன் சித்தாந்தம் என்ன? என்பதை பாமகவின் தலைமையின் கீழ் அணிவகுக்கும் மனசாட்சி உளள சமூகம் யோசித்துப் பார்க்கட்டும்.
மேல்பாதி திரௌபதி அம்மன் ஆலயமும் ஸ்ரீரங்கம் ரங்கநாதன் ஆலயமும் வழிபடும் முறையில் மாறுபடலாம். ஆகமங்களின் பெயர் வேறுபடலாம். ஆனால் காவல் கொடியேனின் நாராயணனின் சகோதரியான தீ மகள் திரௌபதி என்பது மாறாத தத்துவம். திரௌபதியை வணங்குபவர்கள் அனைவருக்கும் நாராயணன் அனுக்கிரகம் பூரணம் என்பது சனாதனத்தின் எழுதப்படாத நியதி. நாராயணன் தாள் பணிந்து வணங்குபவர்கள் எல்லோருக்கும் தீமைகளான திரௌபதி பாதுகாப்பு எப்போதும் இருக்கும் என்பது அவளின் சகோதர சாசனம் . இதை உணர்ந்தவர்களுக்கு திரௌபதி அம்மன் ஆலயமும் திருவரங்கம் அரங்கநாதன் ஆலயமும் வேறல்ல ஒன்றே என்பது புரியும். இந்த இரண்டு ஆலயங்களையும் பாதுகாக்க வேண்டிய காரணம் தேவை புரியும். இந்த ஆலயங்களை பாதுகாக்க தமிழகத்தில் பாஜக கட்சியும் ஆட்சியும் அவசியம் என்பதும் புரிய தொடங்கும். இதை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அப்பட்டமான இந்து இந்திய விரோதிகள் என்ற கசப்பான உண்மையும் புரியும்.
தமிழகத்தின் தற்போதைய தேவை சாதிய அரசியலும் இன மொழி பிரிவினை பேசும் அரசியலும் இல்லை. தமிழக மக்களை சாதி மத இன மொழி கடந்து இந்தியர்களாக ஒருங்கிணைக்கும் ஒரு தேசிய அரசியல் தேவை. தமிழகத்தில் இருக்கும் மக்களை சாதி இன மொழி கடந்து இந்து மக்களாக ஆன்மீக குடையின் ஒன்றிணைக்கும் ஒரு தேசிய ஆன்மீக அரசியல் தேவை. தேசியம் தெய்வீகம் என்ற இரண்டு நிலைப்பாட்டின் கீழ் மக்களை ஒருங்கிணைக்கும் பாஜக போன்ற வலுவான தேசிய கட்சி தேவை. சாதி மோதல்களையும் மத மோதல்களையும் ஊக்குவிக்கும் மக்களை பிளவுபடுத்தும் திராவிட சித்தாந்தங்களை தகர்க்க தேசிய சித்தாந்தமே தேவை. அதை முன்மொழியும் தமிழக பாஜகவும் அதன் வலுவான பாஜக தலைவரும் தன் உலகத்தின் தற்போதைய கட்டாயத் தேவை. அவ்வகையில் தமிழகத்தில் இருக்கும் ஆன்மீக வழியில் வாழும் மக்கள் அவர்களின் நம்பிக்கைகள் கலாச்சாரங்கள் வழிபாட்டு முறைகளை பாதுகாத்துக் கொள்ளவும் இங்கிருக்கும் வாக்கு வங்கி அரசியலில் இருந்து விடுபட்டு தலை முறைகளை பாதுகாக்கவும் அவர்களுக்கு தமிழக பாஜகவும் அதன் தலைவரும் கட்டாய தேவை என்பது புரிந்து கொள்ள தொடங்கி விட்டார்கள்.
அதனால் தான் ஆண் பெண் வயது வித்தியாசம் இன்றி அனைவரும் தமிழக பாஜக தலைவரை தங்களுள் ஒருவராக தங்களுக்கான ஒருவராக அடையாளம் கண்டு அவரின் பின் அணிவகுக்க தொடங்கி விட்டார்கள். இதை திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் உணர்ந்து கொண்டு தான் அவரை தடுத்து தமிழக பாஜகவை முடக்க வேண்டும் என்று பிரயத்தனம் செய்து வருகிறது. ஆனால் அவர்களாலே முடியாத விஷயம் தன்னால் முடியும் என்று பாமகவின் அன்புமணி ராமதாஸ் வலிய வந்து தமிழக பாஜக தலைவரை எதிர்க்கிறேன் என்ற பெயரில் பாமகவின் குறுகிய வட்ட அரசியலையும் சாதிய வாக்கு வங்கி அரசியலையும் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார். இதன் மூலம் ஏற்கனவே அதிருப்தியிலும் மனக்கசப்பிலும் இருக்கும் வன்னிய குல மக்களும் மேல் பாதி முதல் ஸ்ரீரங்கம் வரை ஆலயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனில் தமிழகத்தில் பாஜகவின் ஆட்சிதான் தேவை என்ற ஒருமித்த முடிவுக்கு வரப் போகிறார்கள். அது பாமகவை மேலும் மேலும் சரி விலேயே இழுத்துச் செல்லும். திமுக அதிமுக என்ற இரண்டு கட்சிகளிடம் பேரம் பேசி வளர்ந்த கட்சி அந்த இரண்டு கட்சிகளுமே அழியும் போது அவர்களோடு சேர்ந்து தானே வீழ்ச்சியை எதிர்கொள்ளும். அது தமிழகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த வாக்கு வங்கி அரசியலையும் தகர்த்து தேசிய அரசியலுக்கு வழிவகுக்கும்.