தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் லட்சுமி சுப்ரமணியன் மற்றும் சபீர் வாங்கி கட்டிக் கொண்ட காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
கொரோனா தொற்று இந்தியாவில் உக்கிரமாக இருந்த சமயத்தில், பா.ஜ.க. அரசு தீவிர முயற்சியை மேற்கொண்டது. மத்திய அரசின் வழிகாட்டுதல் படி மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டன. அதன்பயனாக, கொரோனா தொற்று இந்தியாவில் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டன. இதற்கு, பக்க துணையாக இருந்தவர்கள் தூய்மை பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளை பல்வேறு நாடுகள் வெகுவாக பாராட்டி இருந்தன. ஆனால், இதற்கு களங்கம் கற்பிக்கும் விதமாக கம்யூனிஸ்ட்கள், பிரிவினைவாதிகள், அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் என்று பலர் பாரதப் பிரதமர் மீதும் இந்திய மருத்துவ துறையின் மீதும் சேற்றை வாரி இறைத்தனர். அந்த வகையில், டைம்ஸ் நவ் ஊடகத்தில் ( முன்பு ) பணியாற்றியவர் நெறியாளர் சபீர் அகமது. இவர், பாரதப் பிரதமர் மோடி மேற்குவங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த போது தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனாவை கட்டுப்படுத்துவது பற்றி இந்த அரசுக்கு அக்கறையில்லை மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்வது தான் முக்கியமா? என்று பதிவிட்டு இருந்தார்.
அதே வேளையில், திருச்சி மாவட்டம் சிறுகனுரில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. மிகப்பெரிய மாநாட்டினை நடத்தி இருந்தது. இந்த, மாநாட்டினை பார்த்து விட்டு ஆச்சர்யத்துடன் வாய் பிளந்தவர் தான் இந்த ஊடக நெறியாளர். பாரதப் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் செய்தால் மக்கள் மீது அக்கறையில்லை. தி.மு.க. தலைவர் பிரச்சாரம் செய்தால் கொரோனா தொற்று பரவாது என்பது போல சபீர் அகமதுவின் கருத்து அமைந்து இருந்தது.
இதனிடையே, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன்பின்பு, பத்திரிகையாளர்களை சந்தித்தார். அக்கூட்டத்தில், தி.மு.க.வின் ஆசி பெற்ற சபீர் அகமது மற்றும் லட்சுமி சுப்ரமணியன் இருவரும் பங்கேற்றனர். அப்போது, குரங்கு என்று பத்திரிகையாளர்களை கூறியதற்காக நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என லட்சுமி குரங்கு பிடியாக அடம் பிடித்தார். இதற்கு, அண்ணாமலை நான் எந்த தவறும் செய்யவில்லை. மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று உறுதியாக கூறிவிட்டார். அதேபோல, குறுக்க மறுக்க பல்வேறு கேள்விகளை எழுப்பி சைக்கிள் ஒட்ட முயன்ற சபீர் அகமதுவை பஞ்சர் செய்து டிஞ்சர் தடவி அண்ணாமலை அனுப்பி வைத்து இருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.