பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது கட்சி தொண்டர் ஒருவரின் காலில் விழுந்த காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
தொண்டர்களுக்கும், மூத்தவர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கட்சியாக பா.ஜ.க. இருந்து வருகிறது. அதனை மெய்ப்பிக்கும் விதமான, பல்வேறு காணொளிகளையும், புகைப்படங்களையும் இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும். அந்த வகையில், முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாய் மதுரை மாவட்டம் பில்லுச்சேரியை சேர்ந்த சின்னப்பிள்ளையின் சமுக சேவையை பாராட்டி விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது அவரது காலில் விழுந்த சம்பவம் இன்றும் தமிழகத்தில் பேசுப்பொருளாக இருந்து வருகிறது.
இதனிடையே, சுதந்திர போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் 125 – வது பிறந்தநாள் விழா ஆந்திர மாநிலம், பீமாவரத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பாரதப் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதையடுத்து, தனது உரையை முடித்து கொண்டு மேடையை விட்டு கீழே இறங்கிய பிரதமர் தனக்குரிய பாதுகாப்பினையும் மீறி, ஆந்திராவின் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரரான பசாலா கிருஷ்ண மூர்த்தியின் மகளை தேடி சென்று அவரிடம் ஆசி வாங்கினார். இப்படியாக, பா.ஜ.க.வை சேர்ந்த மூத்த தலைவர்கள் இருந்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க. அரசின் பால்விலை உயர்வை கண்டித்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்றைய தினம் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, தம்மை சந்திக்க வந்த தொண்டர் ஒருவர் அண்ணாமலையில் காலில் விழுந்துள்ளார். இதனை, சற்றும் எதிர்பார்க்காத பா.ஜ.க. தலைவர் பதிலுக்கு தனது கட்சியின் தொண்டர் காலில் விழுந்த சம்பவம் தான் இதில் ஹைலைட்.
இதுதான் தேசிய மாடலுக்கும், திராவிட மாடலுக்கும் உள்ள வித்தியாசம் என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.