பிரபல இணையதள ஊடகமான ’வியன் தமிழ்’ பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குறித்து மக்களிடம் கருத்து கேட்ட காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
முன்னாள் காவல்துறை உயரதிகாரி மற்றும் தமிழக பா.ஜ.க. மாநில தலைவராக இருப்பவர் அண்ணாமலை குப்புசாமி. இவர், அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவல் கடந்த 2021 – ஆம் ஆண்டு சூலை – 8 ஆம் தேதி நியமிக்கப்பட்டார். இவர், பொறுப்புக்கு வந்தபின்பு தமிழக பா.ஜ.க.வின் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது. இதன்காரணமாக, தி.மு.க.வை சேர்ந்த கழக கண்மணிகள், பத்திரிகையாளர்கள், நெறியாளர்கள் மற்றும் யூ டியூபர்ஸ் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இதுதவிர, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் செல்வாக்கு உயர்ந்த வண்ணம் உள்ளன. அதனை, மட்டுப்படுத்தும் நோக்கில் இரவு பகலாக தி.மு.க.வின் அடிவருடிகள் குழுக்கள் மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
அதனை மெய்ப்பிக்கும் வகையில், அண்ணாமலையை குறைத்து மதிப்பிடாதீர்கள் அவர் தெளிவான திட்டத்துடன் செயல்பட்டு கொண்டு இருக்கிறார். மற்ற பா.ஜ.க தலைவர்களை விட இவர் தீவிரமாக செயல்படுகிறார் என்று தி.மு.க.வை எச்சரிக்கும் வகையில், மூத்த பத்திரிகையாளர் மணி பிரபல இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அலறிருந்தார். இதையடுத்து, வடநாட்டை சேர்ந்த பிரபல அரசியல் விமர்சகர் ரிஷிபக்ரி, தமிழகத்தில் பா.ஜ.க.வின் வளர்ச்சியையும், அண்ணாமலையின் எழுச்சியையும் வெகுவாக பாராட்டி இருந்தார்.
இந்நிலையில், பிரபல இணையதள ஊடகமான ’வியன் தமிழ்’ பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குறித்து மக்களிடம் கருத்து கேட்டுள்ளது. அக்காணொளியில், தமிழக முதல்வராக அண்ணாமலைதான் வர வேண்டும் எனவும், அவரின் சிறப்பான செயல்பாடுகள் குறித்து வெகுவாக பாராட்டியுள்ளனர்.
மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
