அண்ணாமலை கொடுத்த அடி: அந்தர்பல்டி அடித்த தி.மு.க.!

அண்ணாமலை கொடுத்த அடி: அந்தர்பல்டி அடித்த தி.மு.க.!

Share it if you like it

திருவாரூர் வீதிக்கு கருணாநிதி பெயர் வைப்பதை திடீரென நிறுத்தி வைத்திருக்கிறது தமிழக அரசு. இது பா.ஜ.க.விற்கு கிடைத்த வெற்றி என்று பொதுமக்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

ஹிந்துக்கள் சார்ந்த பண்டிகைகள், சடங்குகள் மற்றும் விழாக்களுக்கு ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு இன்றுவரை முட்டுக்கட்டை போட்டு வருகிறது. அந்த வகையில், திராவிடர் கழகத்தினர் எதிர்ப்புத் தெரிவித்த ஒரே காரணத்திற்காக, கடந்த 500 ஆண்டுகளாக தருமபுர ஆதீனத்தில் நடைபெற்று வரும் ‘பட்டின பிரவேசம்’ நிகழ்ச்சிக்கு திடீரென தி.மு.க. அரசு தடை விதித்தது. இதற்கு, பல்வேறு ஆதீனங்கள் தங்களது கடும் எதிர்ப்பினை பதிவு செய்திருந்தன. இதையடுத்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அதிரடியாக வெளியிட்ட அறிக்கையில், தருமபுர ஆதீனத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான ‘பட்டின பிரவேசம்’ மீதான தடை, தமிழக நாகரிகம் மற்றும் கலாசாரத்திற்கு எதிரானது. ஆதீனத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதைத் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சட்டவிரோத உத்தரவை எதிர்த்து நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்குமாறு ஆதீனத்திடம் கோரிக்கை வைப்போம். கோபாலபுர குடும்பத்தை அவரது கட்சியினர் தூக்கிச் சுமப்பதை போல் அல்ல இது. ஊழியம் மற்றும் குருவுக்குச் செய்யும் சேவைக்கும் உள்ள வேறுபாடுகளைக்கூட அறியாதவர் இந்த கோபாலபுர குடும்பத்தார். இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்ட பா.ஜ.க. தயாராக இருக்கிறது என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து, பட்டின பிரவேசம் நிகழ்ச்சிக்கு தி.மு.க. அரசு உடனே அனுமதி வழங்கியது.

Image

இதையடுத்து, உலகப் புகழ் பெற்ற திருவாரூர் கோவிலின் தெற்கு ரத வீதிக்கு, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் வைக்க வேண்டும் என்று திருவாரூர் நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்ட்டது. பல்லாண்டு காலமாக இருந்து வரும் தெருவின் பெயரை மாற்றி ஒரு நாத்திகவாதியின் பெயரை வைப்பதா? என அவ்வூர் மக்கள் தங்களது கோவத்தை வெளிப்படுத்தி இருந்தனர். மேலும், ஹிந்துக்களை இந்த அரசு மீண்டும் சீண்டி வருகிறது என பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த விஷயம், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் காதுக்கு எட்டியது. இதையடுத்து, நேரடியாக களத்தில் இறங்கி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி ஆளும் கட்சியின் அராஜக செயலை வெளுத்து வாங்கியிருந்தார் அண்ணாமலை. இப்போராட்டத்தில் திரண்ட கூட்டத்தை பார்த்து தி.மு.க அரசு மிரண்டு போனது என்பதே நிதர்சனம்.

இதைத் தொடர்ந்து, திருவாரூர் வீதிக்கு கருணாநிதி பெயர் வைப்பதை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு திடீரென அறிவித்திருக்கிறது. இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கொடுத்த அடிதான் காரணம் என்று பொதுமக்கள் உட்பட நெட்டிசன்கள் வரை பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it