காங்கிரஸ் கட்சியை கலாய்த்து தள்ளிய தமிழக பா.ஜ.க தலைவரின் காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.
இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து விட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த பொழுது பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதாவது;
கே.எஸ். அழகிரி அண்ணன் காங்கிரஸை ஐ.சி.யூ.வில் வைத்து இருக்கிறார். எப்பொழுது, வேண்டுமானாலும் அக்கட்சி ஐ.சி.யூ.வில் இருந்து வெளியே வந்து விடும். எனவே, தமிழக அரசியல் நிலவரத்தை பற்றி பேசுவதை அவர் முதலில் நிறுத்த வேண்டும். அந்த கட்சி பீஸ் பீஸா தற்பொழுது பிரிந்து கிடக்கிறது.
காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் வாசலில் வேட்டி சட்டை விற்பனை செய்பவர்கள் உட்கார்ந்து இருப்பார்கள். கட்சி அலுவலகத்திற்குள் ஏன்? வேட்டி சட்டை வைத்து இருக்கிறீர்கள் என்று கேட்டால். நிகழ்ச்சி முடிந்து வெளியே வரும் பொழுது 100 சட்டையாவது கிழியும் அப்பொழுது இந்த சட்டைகள் அனைத்தையும் விற்பனை செய்து விட முடியும் என்று கடை வைத்து இருப்பவர் கூறுவார். அப்படிப்பட்ட, கட்சியை நடத்தி கொண்டு இருக்கும் கே.எஸ். அழகிரி தமிழக அரசியல் பற்றி பேசுவதை உடனே நிறுத்த வேண்டும்.
சிந்தி சிதறி இங்கு ஒன்றும் அங்கு ஒன்றுமாக கிடக்கும் காங்கிரஸை முதலில் ஒட்ட வைக்கும் பணியை அவர் மேற்கொள்ள வேண்டும். அதற்கான, பெவிக் குயிக்கை செலவை பா.ஜ.க ஏற்றுக் கொள்ளும் என காங்கிரஸை மிக கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.