தேசிய மாடல் மற்றும் திராவிட மாடலுக்கு உள்ள வித்தியாசம் இதுதாங்க என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தி.மு.க.வில் அடிமட்ட தொண்டன் எத்தனை ஆண்டுகள் உழைத்தாலும், இறுதி வரை அவர்களால் அக்கட்சியின் உயர்ந்த பொறுப்புகளுக்கு வர முடியாது. இதனை, அறிவார்ந்த தமிழக மக்கள் நன்கு அறிவர். அதேபோல, முரசொலி வாசகர்களும் நன்கு அறிவர். இதுதான், திராவிட மாடல் குடும்பத்திற்கும், தேசிய மாடல் குடும்பத்திற்கும் உள்ள வித்தியாசம் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
இதனிடையே, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மாணவ, மாணவிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதேபோல, பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகளும் அவருக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றன. இப்படியாக, கட்சிபணி, மக்கள் பணி என்று மிகவும் பரபரப்பாக இருந்து வருகிறார்.
இதற்கிடையில், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தனக்கு கிடைத்த அனுபவங்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் விதமாக தனது நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட்டு வருகிறார். அதே வேளையில், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருபவரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் காசு சம்பாரிக்கும் விதமாக தனது படங்களுக்கு விளம்பரம் செய்வதையே தனது முழு நேர தொழிலாக கொண்டுள்ளார்.
நிறைய படியுங்கள் என பள்ளி மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. தனது படங்களை பாருங்கள் என மறைமுகமாக மாணவர்களை தூண்டி விடும் உதயநிதி. இதுதாங்க, தேசிய மாடலுக்கும், திராவிட மாடலுக்கு உள்ள வித்தியாசம் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.