வெளியுறவுத்துறைன்னா என்னான்னு தெரியுமா?  அண்ணாமலை காட்டம்!

வெளியுறவுத்துறைன்னா என்னான்னு தெரியுமா? அண்ணாமலை காட்டம்!

Share it if you like it

தி.மு.க அரசு அமைத்து உள்ள 4 பேர் கொண்ட குழுவை பற்றி, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு அவர் அளித்த பதில் தான் தற்பொழுது ஹாட் நியூஸாக மாறியுள்ளது.

“ஆபரேஷன் கங்கா’ என்னும் திட்டம் கடந்த 10 நாட்களுக்கு முன்பே மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இதன் மூலம், உக்ரைனில் சிக்கியுள்ள ஏராளமான இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் சூழல் உருவாகியுள்ளது. அந்த வகையில், வல்லரசு நாடுகளே தங்களது குடிமக்களை மீட்க திணறி வருகிறது. இந்தியாவின் மீட்பு பணியை பார்த்து, மற்ற நாட்டு மாணவர்கள் இந்தியாவை வெகுவாக இன்று வரை பாராட்டி வருகின்றனர்.

பாகிஸ்தான், பங்களாதேஷ், துருக்கி, உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மாணவர்கள். இந்தியாவின் தேசிய கொடியை பயன்படுத்தி நாங்கள் உயிர் பிழைத்தோம் என்று கூறிய காணொளிகளை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும். இப்படியாக, மோடி அரசிற்கு நாளுக்கு நாள் நற்பெயர் கிடைத்து வருகிறது. அதோடு மட்டுமில்லாமல், போர் உக்கிரமாக நடைபெற்று வரும் சூழலில், ரஷ்ய அதிபரிடம் பேசி ஆறுமணி நேரம் போரை நிறுத்தியவர் பாரதப் பிரதமர் மோடி. அதிநவீன போர் விமானம், தனியார் விமானம் மற்றும் நான்கு மத்திய அமைச்சர்கள் தற்பொழுது களத்தில் உள்ளனர். இந்த நிலையில் தான், தி.மு.க அரசு 4 பேர் கொண்ட குழுவை அமைத்து உள்ளது. இது குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அவர் அளித்த பதில் தான் தற்பொழுது ஹாட் நியூஸாக மாறியுள்ளது.


Share it if you like it