பா.ஜ.க தலைவர் குறித்து நெறியாளர் மாதேஷ் எழுப்பிய கேள்விக்கு பாண்டே மாஸ் பதிலை அளித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க தலைவராக இருப்பவர் அண்ணாமலை. இவர், தனது கட்சி அலுவலகத்திற்கு வரும் பத்திரிக்கையாளர்களிடம் கண்ணியமான முறையில் இன்று வரை நடந்து கொள்கிறார். இருப்பினும், ஆளும் கட்சியை சேர்ந்த நிருபர்கள் மற்றும் தி.மு.க.வின் ஆசி பெற்ற நிருபர்கள் பா.ஜ.க. தலைவரிடம் குதர்க்கமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இன்று வரை இதுதொடர்கதையாக இருந்து வருகிறது. அதற்கு, பா.ஜ.க தலைவரும் தக்க பதிலடியை உடனுக்கு உடன் வழங்கி விடுவது தான் ஹைலட். இப்படிபட்ட சூழலில், அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிருபர் ஒருவர் கேள்விக்கு மேல் கேள்வியை எழுப்பி அண்ணாமலையை வம்புக்கு இழுத்தார். இதற்கு, பா.ஜ.க தலைவர் கொடுத்த பதிலடியை பெரும்பாலானோர் வரவேற்று இருந்தனர்.
அந்தவகையில், ஆதன் ஊடகத்தின் நெறியாளர் மாதேஷ் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பற்றி எழுப்பிய கேள்விகளுக்கு பாண்டே கூறியதாவது;
பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் செயல்பாடு, அவரது அரசியல் பயணம் சரியாக சென்று கொண்டு இருக்கிறதா? அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள். ஆம், அவர் சரியான திசையில் தான் சென்று கொண்டு இருக்கிறார்.
ஒரு மூத்த பத்திரிக்கையாளர் நீங்க, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பத்திரிக்கையாளர் ஒருவரை ஏலம் விட்டாரே?
நான் பிரஸ்டியூட் என்று சொன்னவர்களையும் பார்த்து இருக்கிறேன். ரெட் லைட் ஏரியா பத்திரிக்கை என்று சொன்னவர்களையும் பார்த்து இருக்கிறேன். நாங்கள் போட்ட பிச்சை என்று சொன்ன அரசியல் தலைவர்களையும் நான் பார்த்து இருக்கிறேன். அதற்கு, எந்த ரியாக்ஷன் காட்டாதவர்களையும் நான் பார்த்து இருக்கிறேன். அதனால், இது பற்றி நான் பேசவில்லை. உங்களது பதில் இப்படி இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
கடந்த ஒன்றரை வருடத்திற்குள் அண்ணாமலை பெரிய இடத்திற்கு வந்து விட்டார். பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் பொழுது தொடர்ந்து மோதல் போக்கு ஏற்படுகிறதே?
இதற்கு, காரணம் நம்மை போன்ற பத்திரிக்கையாளர்கள் தான் என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.