திராவிட மாடல் ஆட்சி குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் தெறி பேச்சு தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் தற்பொழுது தமிழகத்தில் ஆட்சி நடைபெற்று வருகிறது. விடியல் கிடைக்கும் என்று நம்பிய மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அந்த அளவிற்கு, சட்டம் ஒழுங்கு பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. இதன்காரணமாக, பொதுமக்கள் அச்சத்துடனும் பயத்துடனும் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு, எல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய முதல்வர் இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என்று ஊர் முழுக்க வெற்று விளம்பரம் செய்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அந்தவகையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை திராவிடல் ஆட்சி குறித்து கூறியதாவது;
தமிழக முதல்வர் இதுவரை 20 தடவை இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சான்று என குறிப்பிட்டுள்ளார். அவை எதற்கு என்று பார்ப்போம். தீபாவளிக்கு மட்டும் வாழ்த்து சொல்ல மாட்டேன் என்கிறீர்கள், வேற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்கிறீர்களே என சட்டசபையில் உறுப்பினர்கள் கேள்வி கேட்கிறார்கள். உடனே வெகுண்டெழுந்து இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சான்று. தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதற்கும் திராவிட மாடல் ஆட்சிக்கும் என்ன சம்பந்தம். அதேபோல, வேலுரில் ஒரு நிகழ்ச்சிக்கு செல்கிறார், பயனாளிகளுக்கு மத்திய அரசின் திட்டத்தை மாநில அரசு கொடுக்கிறது. ஸ்டிக்கரை மட்டும் ஒட்டி கொடுத்து விட்டு இதுதான் திராவிட மாடல் ஆட்சி என்று குறிப்பிடுகிறார். இதுக்கும் அதுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. அதன்பின்பு சென்னையில் இந்த வருடம் கொஞ்சம் மழை பெய்தது. வெப்பம் பெரிதாக இல்லை. பரவாயில்லையே நம்ம தளபதி ஆட்சியில் மழை வந்து இருக்கே என்று சொன்னால். இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சான்று. இப்பொழுது வெயில் அதிகமாக இருக்கு என்ன அண்ணே என்று கேட்டால். மழை பெய்தால் சென்னை வெள்ளத்தில் முழ்கி விடும் அதனால் தளபதி வெயிலை கொண்டு வந்துள்ளார். இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சான்று என தமிழக முதல்வரை மையப்படுத்தி பா.ஜ.க தலைவர் கிண்டல் செய்து பேசிய காணொளி தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைர்லாக துவங்கியுள்ளது.
அதன் லிங்க் இதோ.