அண்ணாமலையால் எல்லாம் போச்சு…   கதறிய கம்யூனிஸ்ட் நிர்வாகி!

அண்ணாமலையால் எல்லாம் போச்சு… கதறிய கம்யூனிஸ்ட் நிர்வாகி!

Share it if you like it

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் அசுர வளர்ச்சி குறித்து கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகி லெனின் துரைராஜ் ஐ.பி.சி. இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கதறி இருக்கிறார். இக்காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழக பா.ஜ.க தலைவராக இருப்பவர் அண்ணாமலை. இவர், அக்கட்சியின் தலைவர் பொறுப்புக்கு வந்த பின்பு அக்கட்சி அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. பா.ஜ.க.வின் மின்னல் வேக வளர்ச்சியை கண்டு எதிர்க்கட்சிகள் மிரண்டு போய் இருக்கின்றன. இதே கருத்தை, பல அரசியல் நோக்கர்களும் தெரிவித்து வருகின்றனர். இதுதவிர, நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில், தமிழகத்தின் மூன்றவாது பெரிய கட்சியாக பா.ஜ.க. உருவெடுத்து இருக்கிறது.

தமிழ்நாட்டில் பா.ஜ.க.விற்கு எதிராக போராட வேண்டியது என்பது அண்ணாமலை வந்த பிறகு கஷ்டமானதாக மாறிவிட்டது இதுதான் உண்மை. அவர் புது புதுசா செய்கிறார். அதனால் தான் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறேன் அரசியலில் அவர் ஆபத்தான மனிதர். அதற்கு, முன்னாள் இருந்த பா.ஜ.க தலைவர்களோடு நான் பழகி இருக்கிறேன். இல.கணேசனை பார்த்து இருக்கிறேன், பொன்னாரை பார்த்து இருக்கிறேன், சி.பி.ராதாகிருஷ்ணன் பார்த்து இருக்கிறேன், தமிழிசை செளந்தரராஜனை பார்த்து இருக்கிறேன். அவர்களிடம் இல்லாத ஒன்று கட்சியை வளர்க்க எந்த எல்லைக்கும் செல்லும் சக்தி மிக்க மனிதராக அண்ணாமலை இருக்கிறார். வருங்காலத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்த்தால் மட்டுமே அண்ணாமலையை எதிர் கொள்ள முடியும் என மூத்த பத்திரிகையாளர் மணி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கதறி இருந்தார்.

இப்படிப்பட்ட சூழலில், பிரபல இணையதள ஊடகமான ஐ.பி.சி. தமிழ் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த லெனின் துரைராஜ் பேட்டி கண்டு இருக்கிறது. அப்போது, நெறியாளர் எழுப்பிய கேள்வி?

தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை, பதவியேற்று ஒரு வருடத்தை கடந்து இருக்கிறது. அவரது, தலைமையில் பா.ஜ.க. இங்கு வளர்ந்து இருக்கிறதா?

மாநில தலைவர்களாக தமிழிசை செளந்தர ராஜன், எல்.முருகன் இருந்த போது செய்ய முடியாததை இங்கு அண்ணாமலை செய்து காட்டி வருகிறார். இதில், எந்த மாற்று கருத்துமில்லை. பா.ஜ.க. தனது தடத்தை இங்கு வலுவாக பதிவு செய்து இருக்கிறது. கடந்த, ஆகஸ்ட் மாதம் 16 – ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் கூட்டம் நடைபெற்றது. அதில், என்ன முடிவு எடுக்கப்பட்டது என்றால், வருகிற 2024 – ஆம் ஆண்டுக்குள் பா.ஜ.க.வின் கால் தடத்தை இங்கு பதிவு செய்ய வேண்டும் என அவர்கள் பேசியிருக்கிறார்கள்.  

இதுவரை, யாரும் அதுபோன்று இங்கு பேசியதில்லை. அ.தி.மு.க. இன்று மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், நாங்க தான் உண்மையான எதிர்க்கட்சி என அண்ணாமலை பேசி வருகிறார். அவரின், வளர்ச்சி கடந்த காலங்களை விட இப்போ? அதிகமாக இருக்கு, அவரும் வேகமாக வளர்ந்து வருகிறார். அதை நாம் புரிந்து கொண்டால் மட்டுமே, பா.ஜ.க.வை எதிர்த்து அரசியல் செய்ய முடியும். எல்லோரும், சொல்கிறார்கள் அண்ணாமலையை ஒன்றும் கிடையாது. அவரது, பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என பேசி வருகிறார்கள். ஆனால், அண்ணாமலை மிகவும் ஆபாத்தான மனிதர் என லெனின் கதறி இருக்கிறார். இக்காணொளி, தான் தற்போது வைரலாகி வருகிறது.

https://mobile.twitter.com/annamalai_chap2/status/1568156150818033665

https://mobile.twitter.com/Sekar06997963/status/1568189961274531846

Share it if you like it