அண்ணாமலையின் குற்றச்சாட்டை மேற்கோள் காட்டி ஊடக நெறியாளர் கேள்வி எழுப்பிய போது தன்னை அறியாமலே உண்மையை ஒப்புக் கொண்ட அமைச்சரின் காணொளி வைரலாகி வருகிறது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்பு பல்வேறு வரிகளை விதித்து வருகிறது. அந்த வகையில், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பஸ் கட்டண உயர்வு என்று தமிழக மக்களை தொடர்ந்து துன்புறுத்தி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், நேற்றைய தினம் பால் விலையை ரூ. 12 உயர்த்தி இருந்தது. தமிழக அரசின் இந்த முடிவு பொதுமக்கள் மத்தியில் கடும் கோவத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, பால்வளத்துறை அமைச்சர் நாசர் பத்திரிகையாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறினார் ; பாலுக்கு ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு விதித்துள்ளது. இதுவரை, வரலாற்றில் இல்லாத நிகழ்வு. அதன்காரணமாகவே, இன்று விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.
இதனிடையே, அமைச்சர் நாசரின் பொய் குற்றச்சாட்டை தோலுரிக்கும் விதமாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, இப்படிப்பட்ட அமைச்சர்களின் வாய் கோளாறினால் தான் தமிழக அரசு நிர்வாகக் கோளாறால் சிக்கி தவிக்கிறது. பாலுக்கு GST வரி விலக்கு இருப்பது கூட தெரியாதவர் தான் திறனற்ற திமுக ஆட்சியின் பால்வளத்துறை அமைச்சர். பொறுப்பற்ற முறையில் பொய்களை சொல்லாமல் பால் விலை உயர்வைத் திறனற்ற திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில், ஏபிபி நாடு இணையதள ஊடக செய்தியாளர் ராஜா, பால்வளத்துறை அமைச்சர் நாசரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு இருக்கிறார். அப்போது, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சுட்டிக்காட்டிய கருத்தை மேற்கோள் காட்டி கேள்வி எழுப்பினார். இதற்கு, அமைச்சர் அளித்த பதில் தான் ஹைலைட். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.