தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தவிர்த்து இனி தமிழக அரசியல் இல்லை என்று மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் பிரபல இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
கடந்த 2021 – ஆம் ஆண்டு தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பொறுப்பு ஏற்றார். இவர், பதவிக்கு வந்த பின்பு அக்கட்சி அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. பட்டிதொட்டி எங்கும் பா.ஜ.க.வை கொண்டு சென்றதில் அவருக்கு பெரும் பங்கு உண்டு என்பதில் யாருக்கும் ஐயம் இருக்காது. இப்படிப்பட்ட சூழலில், மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் எம். சுவாமி, சாமானியர் இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருக்கிறார் ;
பா.ஜ.க.வை அண்ணாமலைக்கு முன்பு அண்ணாமலைக்கு பின்பு பிரித்து பார்க்க வேண்டும். பா.ஜ.க.வே எதிர்பார்க்காத அளவிற்கு அரசியல் செய்கிறார். எந்த மாதிரியான அரசியல் என்றால் தமிழ்நாட்டிற்கு தேவையான அரசியல். இந்த மாதிரியான அரசியல் செய்தால் தான் தமிழகத்தில் தாக்கு பிடிக்க முடியும் என்பது அவருக்கு நன்கு தெரியும். முன்னாடி இருந்த தலைவர்களை நான் குறை சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். வெறும் சேனலை பார்த்து விட்டு அறிக்கை விட்டு கொண்டு இருந்தார்கள். இதற்கு, முன்பு இருந்த தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் இருந்து வந்தவர்கள். கட்டுப்பாடு, யாரையும் விமர்சனம் செய்ய கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்தார்கள். கிருபாநிதி அதற்கு முன்பு தலைவர்கள் ஒரு மென்மையான போக்கினை கடைப்பிடித்தார்கள்.
அதனை, அண்ணாமலை உடைத்தார். பா.ஜ.க. சாந்தமாக அரசியல் செய்யும் கட்சி அல்ல வலுவான எதிர்க்கட்சி என்று நிருபித்தார். இவருக்கான, முக்கியத்துவம் அமித்ஷா, மோடி மற்றும் பி.எல். சந்தோஷிடமிருந்து வருகிறது. அதனால், எதை பற்றியும் அண்ணாமலை கவலைப்படுவதில்லை என்று மூத்த பத்திரிகையாளர் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழேகொடுக்கப்பட்டுள்ளது