அண்ணாமலை ஒரு ரோல் மாடல் – பிரபல நடிகர் பெருமிதம்!

அண்ணாமலை ஒரு ரோல் மாடல் – பிரபல நடிகர் பெருமிதம்!

Share it if you like it

விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பிரபல நகைச்சுவை நடிகர் தம்பி ராமையா, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை வெகுவாக பாராட்டிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல நகைச்சுவை நடிகர் தம்பி ராமையா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இவ்வாறு பேசினார்:

சேகுவேரா ஒரு விஷயத்திற்காக போராடியவர். போராட்டம் ஒரு விதத்தில் முற்றுப்பெற்று விட்டது என்று நினைத்தால் அவன் போராளி அல்ல. எதை நோக்கி நாம் நகர்ந்தோமோ அது கிடைத்து விட்டது என்று நினைத்து பெருமைப்படாமல், அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து சென்றவர் சேகுவேரா.

அதைப்போல, ஐ.பி.எஸ். படிப்பு என்பது சாதாரண விஷயம் அல்ல. அதைப் படித்து முடித்து வேறு ஒரு மாநிலத்தில் ஒன்பது வருட காலம் மிஸ்டர் கிளீனாக இருந்தவர் அண்ணாமலை. இன்றைய தினம் ஒரு இயக்கத்தில் இணைந்து, வெகு சில மாதங்களிலேயே மாநிலத் தலைவராக அவர் வந்துள்ளார். இது சாதாரண விஷயம் அல்ல, எவ்வளவு போட்டிகளையும் கடந்து அவர் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியும். இன்றைய இளைஞர்களுக்கு அண்ணாமலை ஒரு ரோல் மாடல் என குறிப்பிட்டு இருக்கிறார். இக்காணொளி, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Share it if you like it