சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழக முதல்வர் ஸ்டாலினை வறுத்தெடுத்த காணொளி தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் சிவங்கை மாவட்டம் காரைக்குடியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க. சட்டமன்ற தலைவர் நைனார் நாகேந்திரன், பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சி.பி. ராதா கிருஷ்ணன், உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியதாவது; இந்தியா பல சர்வாதிகாரிகளை பார்த்து இருக்கிறது. அவர்கள், எல்லாம் மண்ணுக்கு போய் இருக்கிறார்கள். பொடி பொடியாக போய் இருக்கிறார்கள். தவறு செய்பவர்களை தட்டி கேட்பது ஒரு குற்றமாக கருதினால். அதனை தொடர்ந்து செய்வோம், தினமும் செய்வோம், ஒவ்வொரு நாளும் செய்வோம். ஒவ்வொரு நிமிடமும் செய்வோம். தமிழக சிறைகள் நிரம்பும் அளவு செய்வோம். ஒருபுறம், வாய்க்கு வந்ததையெல்லாம் தி.மு.க. அமைச்சர்கள், எம்.பி.கள் பேசி வருகின்றனர்.
மறுபுறம் நமது வாயை அடைத்து விட்டு நம்பர் ஒன் முதல்வர் தான் என்று பட்டத்தை சூட்டிக்கொள்ள முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார். இம்மண்ணில், கடைசி பா.ஜ.க. தொண்டன் இருக்கும் வரை ஆ.ராசா பேசியதை கேள்வி கேட்போம். கடைசி காவல்துறையை சேர்ந்த நண்பர் இருக்கும் வரை எங்களை கைது செய்து சிறையில் அடைத்தாலும் நாங்கள் கவலைப்பட மாட்டோம். சிறைக்கு அஞ்சுபவர்கள் மேடைக்கு மேலும் கிடையாது. கீழே இருக்கும் தொண்டர்களும் கிடையாது என்பதை தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிவித்து கொள்கிறோம்.
நீங்கள் தான் சிறைக்கு செல்ல அஞ்சுவீர்கள். மிசா வழக்கில் நீங்கள் சிறைக்கு செல்லவில்லை மு.க. ஸ்டாலின் அவர்களே. ஆனால், மிசா வழக்கில் சிறை சென்றது போல பொய்யை சொல்லி அலைந்து கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள், உண்மையிலேயே எதற்கு சிறைக்கு சென்றீர்கள் என்பது எங்களுக்கு தெரியும் என அண்ணாமலை ஆவேசமாக பேசியிருக்கிறார். மேலும் விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.