தமிழக பா.ஜ.க.வின் வெற்றியில் திராவிட ஸ்டிக்கர் ஒட்ட முயன்ற சன்.டி.வியின் செயல் பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.
சன் நியூஸில், தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் குணசேகரன். இவர், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய அரசு மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் குறித்த செய்திகளுக்கு மட்டுமே அதிக முன்னுரிமை வழங்குபவர். அதில், பெரும்பாலான செய்திகள் உண்மைக்கு மாறாகவும், அவதூறை பரப்பும் வகையிலும் இருக்கும்.
விடியல் ஆட்சியில், ஏற்படும் அவலங்களை சுட்டிக்காட்டாமல், உடன் பிறப்புகள் குஷியாக இருக்கும் வண்ணம் உ.பி. மாநிலத்தின் மீது தனி பாசம் கொண்டவர் என்ற குற்றச்சாட்டு குணசேகரன் மீது உண்டு. அந்த வகையில், உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் பகுதியில் ஜெய் ஸ்ரீ ராம் என்று கூறுமாறு வற்புறுத்தி இஸ்லாமிய மதத்தை சேர்ந்த முதியவரை கடுமையாக தாக்கி அவரது தாடியை வழித்த கும்பல் வீடியோ வைராலனதை தொடர்ந்து ஒருவர் கைது, மற்றவர்களுக்கு போலீசார் வலைவீச்சு என செய்தி வெளியிட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து, சன் டி.வி. நிர்வாகம் அவசர அவசரமாக தாம் வெளியிட்ட உ.பி. செய்தியை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கியது. அதற்கு, சன் டி.வி. நிர்வாகம் விளக்கமும் கொடுத்து இருந்தது. இப்படிப்பட்ட சூழலில், நரிக்குறவர்களை பழங்குடியினராக அங்கீகரிக்க வேண்டும் என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பெரும் முயற்சி மேற்கொண்டார். அதற்கு, மத்திய அரசு நேற்றைய தினம் ஒப்புதல் அளித்து இருந்தது.
இதனை தொடர்ந்து, நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் அண்ணாமலை மற்றும் பாரதப் பிரதமர் மோடிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பா.ஜ.க.வின் இந்த சாதனை மக்களிடம் சென்று விடக் கூடாது என்பதற்காக, சன். டி.வி. அவசர அவசரமாக திராவிட ஸ்டிக்கர் ஒட்ட முயன்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின் என செய்தி வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து, சன். டிவி. நிர்வாகம் தனது ஸ்டிக்கர் போஸ்டரை உடனே நீக்கியுள்ளது.

