அண்ணாமலையின் ‘அரபி’ படம் ட்ரைலர் வெளியீடு!

அண்ணாமலையின் ‘அரபி’ படம் ட்ரைலர் வெளியீடு!

Share it if you like it

பா. ஜ. க. தலைவர் அண்ணாமலை நடித்திருக்கும் அரபி படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி இருக்கும் நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக பா. ஜ. க. தலைவராக இருப்பவர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை. இவர் முதல் முறையாக ‘அரபி’ என்கிற கன்னட திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தில் இரண்டு கைகளும் இல்லாத ஒரு வாலிபருக்கு நீச்சல் பயிற்சி அளிக்கும் கோச் கேரக்டர் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த ட்ரைலரில் சிங்கம் உருவம் பொறிக்கப்பட்ட புல்லட்டில் அண்ணாமலை வருவதுபோல காட்சி இருக்கிறது. இந்த டிரைலர்தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

/https://www.facebook.com/100008421661582/posts/pfbid0T73k7c7YSfKCBXjXgow2k3dURTHkGzf892VrvaRT3TQUtuQ6RgKj1tZnN9EKThXsl/


Share it if you like it