வி.சி.க தலைவருக்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆறுதல் கூறியிருப்பதை நெட்டிசன்கள் வரவேற்று இருக்கின்றனர்.
தமிழக பா.ஜ.க தலைவராக இருப்பவர் அண்ணாமலை. இவரை, தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் மிக கடுமையாக விமர்சனம் செய்தாலும், தனிப்பட்ட முறையில் தாக்கி பேசினாலும் இன்று வரை அவர்களுக்கு உரிய மரியாதையை பா.ஜ.க தலைவர் கொடுத்து வருகிறார் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அந்தவகையில், பாரதப் பிரதமர் மோடி, அண்ணாமலை மற்றும் ஹிந்து மதத்திற்கு எதிராக பேசக் கூடியவராக இருப்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் என்பதை தமிழகம் நன்கு அறியும்.
இப்படிப்பட்ட சூழலில், வி.சி.க தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் #அம்மா: “ஊர்ல என்ன அநாதையா போட்டுட்டு நீ ஊர சுத்திக்கிட்டுருக்கிற; திடீர்னு எனக்கு நெஞ்ச அடச்சுகிட்டு ஆவி பிரியுற மாதிரி வலி வந்துச்சு; நானே முயற்சி பண்ணி நடுராத்திரில ஆஸ்பத்திரிக்குப் போனேன். உசுரு போவும்போது நீ கூட இருந்தா போதும்” அம்மா இப்படி சொன்னபோது அடிவயிறு கலங்கியது என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை; கருவாக்கி, கவனமாக உருவாக்கி, கலைகளிலே திருவாக்கி, அன்பூட்டி, அமுதூட்டி, அருந்தமிழ் ஊட்டி ஆளாக்கிய அன்னை தானே, நமக்கு முன்னறி தெய்வம். படைத்து, காத்து, எல்லா நலமும் அளித்த, அன்னை மட்டும்தான் கண்ணுக்குப் புலப்படும் கடவுளின் பிம்பம். அண்ணன் திருமா அவர்களின் தாயார், உடல் நலம் குன்றி மருத்துவ சிகிச்சையில் அறிந்து மனத்துயர் அடைந்தேன். அவர் விரைவில் குணமாகி மீண்டு வந்து அருமைச் சகோதரர் மேல் அன்பைப் பொழிய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும் ஆரோக்கியமான அரசியலை தான் நான் விரும்புகிறேன் இதனையே எதிர்கால இளைய தலைமுறைக்கு நான் கற்றுக் கொடுக்க விரும்புகிறேன் என அண்ணாமலை சொல்லாமல் சொல்லி இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.