லண்டனுக்கு புறப்பட்ட அண்ணாமலை …. மெல்ல விடை கொடு விடை கொடு மனமே…. இந்த நினைவுகள் நினைவுகள் கணமே…..தாய்மண்ணே செல்கின்றேன் தூரம் தூரம் !

லண்டனுக்கு புறப்பட்ட அண்ணாமலை …. மெல்ல விடை கொடு விடை கொடு மனமே…. இந்த நினைவுகள் நினைவுகள் கணமே…..தாய்மண்ணே செல்கின்றேன் தூரம் தூரம் !

Share it if you like it

தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு முதலீடுகளை ஈர்க்க நேற்றிரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். அதேநேரம் மறுபுறம் பாஜக மாநில தலைவரான அண்ணாமலை தனது மேற்படிப்பிற்காக லண்டன் இன்று காலை சென்றார். இப்படி ஒரே நேரத்தில் இரு முக்கிய அரசியல் தலைவர்கள் வெளிநாடு செல்கிறார்கள். இரு முக்கிய தலைவர்கள் இல்லாத நிலையில், தமிழக அரசியல் களம் அடுத்த ஒரு மாதம் எப்படி இருக்கும் என்பதில் பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், சர்வதேச அரசியல் கல்வி பயில்வதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்றார். அவருக்கு பாஜக தொண்டர்கள் பாஜக கொடி அசைத்து அவரை விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் லண்டன் செல்லும் அண்ணாமலை, லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி முதல், தொடந்து 13 வாரங்கள், சர்வதேச அரசியல் கல்வி தொடர்பான படிப்பை பயில உள்ளார்.

13 வாரங்கள் கழித்து அக்டோபர் இறுதியில் மீண்டும் தமிழ்நாடு திரும்புவார் என எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில், பாஜக மாநில தலைமை பொறுப்புகளை அண்ணாமலை லண்டனில் இருந்தபடியே கட்சியின் பொறுப்புகளை கவனித்துக் கொள்வார் எனவும், வாரத்துக்கு ஒருமுறை வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக கட்சி செயல்பாட்டுகளை கவனித்து வருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவில் தற்போது 1 கோடி உறுப்பினர் சேர்க்கை என்ற இலக்குடன் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதால், அது குறித்தான விவரங்களை தினசரி சேகரிக்கவும், மேலும் தமிழ்நாட்டில் நிகழும் அரசியல் சம்பவங்கள் மற்றும் மக்கள் பிரச்னைகள் குறித்து பேசுவதற்கும் மாநிலத் துணைத் தலைவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே அண்ணாமலைக்கு மாறாக தமிழ்நாடு பாஜகவிற்கு பொறுப்பு தலைவர் பதவி நியமிக்கப்படவில்லை எனவும் கட்சி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *