Share it if you like it
தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு விரைவாக வழங்கி வருகிறது. அண்மையில் 3 லட்சத்து 56 ஆயிரம் டோஸ் கோவிசீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு இருந்தது. இவை மற்ற மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 270 டோஸ் தடுப்பூசிகள் ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் இன்று சென்னை வந்துள்ளது. தடுப்பூசிகளை மாநில அரசுகள் வீணடிக்க வேண்டாம் என்று மத்திய அரசு அண்மையில் அறிவுரை கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it