ஹமாஸ் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக தனது தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் 11 – வது நாளாக போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பின் மற்றொரு தலைவரான ஒசாமா அல் மிசினி இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஹமாஸ் அமைப்பினர் நடத்தும் தாக்குதலை வடிவமைப்பது மற்றும் பிடித்து வைக்கப்படும் இஸ்ரேல் பிணைய கைதிகளை கையாளுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.