நாடுமுழுவதும் கட்டாய மதமாற்ற தடை சட்டம் அமல்படுத்த வேண்டும் என விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து VHP வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்
கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்திரபிரதேசத்தில் நடந்த ஒரு சம்பவம் நாட்டையே உலுக்கியது. பாகிஸ்தான் உளவு அமைப்பைச் சேர்ந்தவர்கள் உத்திர பிரதேசத்தை சேர்ந்த சுமார் 1000 பேர்களுக்கு மேல் மதமாற்றம் செய்துள்ளனர். அதில் பல மாற்று திறனாளிகளை அடங்குவர். இதுபோன்ற விவகாரங்கள் தொடர் கதையாகி வருகிறது.
உத்திர பிரதேசத்தில் மதமாற்ற தடை சட்டம் அமலில் இருந்ததால், இவ்விவகாரன் வெளிச்சத்திற்கு வந்தது ஆனால் இன்னும் பல மாநிலங்களில் இது போன்ற கட்டாய மதமாற்றம் அதிக அளவில் நடக்கிறது. 1947ம் ஆண்டு நமது நாடு மாதத்தின் பெயரால் துண்டானது போல் மீண்டும் ஒரு நிகழ்வை நாம் அனுமதிக்க முடியாது எனவே நாடுமுழுவதும் கட்டாயமாதமற்ற சட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் நியோகி கமிஷன் விசாரணை நடத்தவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.