தமிழகத்தில் இதுவரையில் பெரும்பான்மை இந்து சமூகத்தை கிள்ளுக்கீரையாக நினைத்து சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கிக்காகவும் ஆட்சி அதிகாரத்திற்காகவும் பெரும்பான்மை மக்களும் அவர்களின் நம்பிக்கைகள் வழிபாட்டு முறைகளும் தமிழகத்தில் பலி கொடுக்கப்பட்டது. அதிலும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் இருக்கும் பெரும்பான்மை மக்கள் விழித்துக் கொண்ட அளவில் கூட தமிழகத்தில் இருக்கும் இந்து மக்கள் விழித்தடையவே இல்லை. இதன் காரணமாக சொற்ப அளவில் விழிப்புணர்வோடு இருக்கும் இந்து ஆன்மீக மக்களுக்கு இங்கு காவிகள் சங்கிகள் பாசிசவாதிகள் மத பயங்கரவாதிகள் ஆரிய பார்ப்பன அடிமைகள் ஆர்எஸ்எஸ் சொம்புகள் என்று விதவிதமான அவதூறு பட்டங்களை கிடைத்து வந்தது. ஆனால் உண்மையில் இங்கு காவி பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தப்படும் எவரும் எந்த ஒரு மதத்திற்கும் எதிராகவோ அல்லது வேறு எந்த ஒரு நம்பிக்கைக்கும் துவேஷமாகவோ இதுவரையில் எதையும் பேசியதோ செய்ததோ இல்லை. அதற்கான தேவையும் அவசியமும் அவர்களுக்கு இல்லை. அவர்களின் ஒரே எண்ணம் நோக்கம் பாரதத்தின் பழமையான சனாதன தர்மமும் அதன் வழியில் வாழும் மக்களும் அவர்களின் வழிபாட்டு முறைகளுக்கான ஒரே உறைவிடமாக இருக்கும் ஆலயங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் .அதன் ஆகமங்கள் பொக்கிஷங்கள் அதன் வழியிலேயே நிர்வகிக்கப்பட வேண்டும் என்ற குறைந்தபட்ச கோரிக்கை மட்டும் தான்.
ஆட்சி அதிகாரம் என்ற பெயரில் இந்து ஆலயங்கள் சூறையாடப்படுவதும் ஆலயத்தின் பொக்கிஷங்கள் சொத்துக்கள் களவாடப்படுவதும் தடுக்கப்பட வேண்டும். இதர வழிபாட்டு தலங்களைப் போல இந்து ஆலயங்களும் அது சார்ந்த மக்களிடத்தில் சுதந்திரமாக நிர்வகிக்க வேண்டும். இதன் மூலம் ஆலயத்தின் வருமானங்கள் அதன் பொக்கிஷங்கள் எல்லாம் சீராக நிர்வகிக்கப்பட்டு அதன் மூலம் ஏழை மாணவர்கள் கல்வி மருத்துவம் உள்ளிட்ட விஷயங்களுக்கு தேவையானவற்றை செய்ய வேண்டும். மேலும் ஆன்மீக வழிபாட்டு முறைகள் கல்வி கலை இலக்கியம் உள்ளிட்ட அவற்றை வளர்த்தெடுக்கவும் இந்து ஆலயங்கள் அந்நாளில் பங்களிப்பு வழங்கியதைப் போல சமகாலத்திலும் பங்களிப்பு வழங்குவதற்கு தேவையான நிர்வாகத்தை முன்னெடுக்க வேண்டும் என்றே தான் அவர்கள் கோரிக்கை விடுத்தார்கள் . ஆனால் அதுவே இங்கு திராவிடத்தால் மத பயங்கரவாதமாக கட்சி அரசியல் சாயமாக சிறுபான்மை விரோதமாக அடையாளப்படுத்தப்பட்டது.
இங்குள்ள மக்களின் அறியாமை விஷயம் அறிந்த மக்களின் சுயநலம் இந்த இரண்டையும் தங்களின் ஆட்சி அதிகாரத்திற்காக பகடையாக பயன்படுத்திக் கொண்ட திராவிட ஆட்சியாளர்கள் இந்து அறநிலையத்துறை என்ற ஒரு துறையை கட்டமைத்து ஒட்டுமொத்தமாக இந்து ஆலயங்களையும் அதன் பொக்கிஷங்களையும் அரச கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டார்கள். மறுபுறம் கட்சி அரசியல் சாதி என்ற பெயரில் பிரிவினையை ஏற்படுத்தி தமிழகத்தில் உள்ள மக்கள் ஆன்மிக குடையின் கீழ் ஒன்றிணையாமல் பார்த்துக் கொண்டார்கள். ஆனால் சமீப காலமாக இந்து முன்னணி இந்து மக்கள் கட்சி வி எச் பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் கண்ணுக்குத் தெரியாமல் கால் தடம் பதித்து வந்த ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகளால் மக்களிடையே நாளுக்கு நாள் விழிப்புணர்வு அதிகரிக்க தொடங்கியது. மக்கள் சாதி மொழி கடந்து இந்துக்களாக மத அடிப்படையில் ஒன்றிணைந்தார்கள். மேலும் சாதி இன வேறுபாடுகளை கடந்து ஆன்மீக வழிபாட்டு மரபுகளின் அடிப்படையில் ஆலயங்களின் மையப்படுத்தி ஆன்மீகக் குடையின் கீழ் இணைய தொடங்கினார்கள்.
இது இத்தனை காலமும் இவர்களை பிளவு படுத்தி அதன் மூலம் குளிர் காய்ந்த திராவிட ஆட்சியாளர்களையும் சிறுபான்மை அமைப்புகள் கட்சிகளையும் ஒரு சேர அதிர வைத்தது. அதை தவிர்க்கவும் அதற்கு காரணமானவர்களை முற்றிலும் அழித்து ஒழிக்கவும் எத்தனையோ சதித்திட்டங்கள் தீட்டப்பட்டது .ஆனால் அத்தனையும் தகர்த்து அதை அடுத்த கட்ட அரசியல் நகர்வாக முன்னெடுப்பு முயற்சி தமிழக பாஜக தலைவர் முழு முனைப்போடு நடந்து வருகிறார். அதன் ஒரு பகுதி தான் தமிழகம் முழுவதிலும் மக்களை நேருக்கு நேராக களத்தில் சந்திக்கும் யாத்திரையும் அங்கு போகும் இடங்களில் எல்லாம் அங்கங்கே இருக்கும் அன்றாட பிரச்சனைகள் தொடங்கி வாழ்நாள் முழுவதும் இருக்கும் நீண்ட கால பிரச்சனைகள் வரையில் ஒவ்வொன்றிற்கும் அவர் தீர்வை முன்மொழிந்து வருவது. அந்த வகையில் அரை நூற்றாண்டு காலமாக தமிழகத்தில் உள்ள ஆன்மீகவாதிகள் தேசியவாதிகள் மத நல்லிணக்க வாதிகளின் ஆழ்மனதை அரித்து கொண்டிருந்த ஒரு புரையோடிய புண்ணிற்கு நிரந்தரமான அறுவை சிகிச்சையே தீர்வு என்று தமிழக பாஜக தலைவர் முகூர்த்தம் குறித்து இருக்கிறார்.
வழக்கமாக பகுத்தறிவு முற்போக்கு வாதம் பற்றி தேசியவாதிகளோ ஆன்மீகவாதிகளோ ஏதேனும் ஒரு வார்த்தை பேசி விட்டால் கூட எதிர் தரப்பில் இருந்து பலத்த கூச்சல் கிளம்பும். குறிப்பாக திராவிட கட்சிகள் அமைப்புகள் மற்றும் அவர்கள் ஆதரவு ஊடகங்கள் ஊடக வாதிகள் எல்லோரும் வரிந்து கட்டி களமிறங்குவார்கள். ஆனால் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆலயத்தின் முன்பிருக்கும் கடவுளை நம்புபவன் முட்டாள் பரப்புபவன் காட்டுமிராண்டி என்ற வாசகமும் அந்த வாசகத்தை பொறிக்கப்பட்ட கல்வெட்டையும் அப்புறப்படுத்துவேன் என்று தமிழக பாஜக தலைவர் பேசி முடித்து முழுமையாக இரண்டு நாட்கள் முடிந்த பிறகும் தமிழகத்தில் ஒரு மயான அமைதி நிலவுகிறது. அதுதான் தமிழக பாஜக தலைவர் சப்தமின்றி சாதித்திருக்கும் பின்னணி வெற்றியின் அடையாளம்.
கடந்த காலங்களில் தமிழக பாஜக தலைவர் மற்றும் இங்குள்ள இந்து அமைப்பு சார்ந்தவர்களின் ஒவ்வொரு அசைவிற்கும் விஷம பிரச்சாரம் செய்கிறோம் எதிர்வினை ஆற்றுகிறோம் என்ற பெயரில் திராவிட ஆதரவு ஊடகங்களும் ஊடகவாதிகளும் சகட்டு மேனிக்கு அவதூறு பிரச்சாரம் செய்வார்கள். அதுவும் சமூக ஊடகங்கள் ஊடகங்கள் வழியாக இறக்கை கட்டி பறக்கும் . பதிலுக்கு அவர்களின் விஷம பிரச்சாரம் அவதூறு பிரச்சாரங்களுக்கு மறுப்பு தெரிவித்து பாஜகவினரும் இந்து அமைப்பினரும் அவரவர் கருத்துக்களை முன்வைப்பார்கள். இதை அனைத்தையும் சமூக ஊடகங்கள் வழியாக பார்த்து அலசி ஆராய்ந்து மக்கள் எதிர் கேள்விகளை வைக்கும் போது திராவிட பிம்பம் முழுமையாக தகரத் தொடங்கியது. அவர்கள் செய்யும் அவதூறு விஷம பிரச்சாரங்கள் எல்லாம் அவர்களுக்கு எதிராகவே திரும்ப தொடங்கியது. இப்படித்தான் அவர்களின் எதிர்வினை மூலமாக திராவிடத்தின் பெரிய தூண்களாக அவர்கள் கட்டி எழுப்பிய இரண்டு பெரிய தலைவர்களின் பிம்பத்தை அண்ணாமலை அவர்களைக் கொண்டே தகர்த்து எறிந்தார். அவர்களும் ஏற்கனவே இரண்டு தலைவர்களின் பிம்பங்கள் தங்களின் கைகளைக் கொண்டே தவிர்க்கப்பட்டதை உணர்ந்து கொண்டுதான் இம்முறை சுதாரிப்பாக ஒட்டுமொத்தமாக அமைதி காக்கிறார்கள்.
இது ஜனநாயகம் கருத்து சுதந்திரம் அதன் குரல்வலையை தமிழக பாஜக நெரிக்க பார்க்கிறது என்று சிறுபான்மை கட்சிகள் அமைப்புகள் சார்ந்தவர்கள் யாரேனும் பேச தொடங்கினால் அதே சாமானிய மக்கள் அவர்களை நோக்கி இந்து ஆலயங்களில் முன்பு இருக்கும் இது போன்ற பகுத்தறிவு சித்தாந்தங்களை எல்லாம் உங்களின் வழிபாட்டு தலங்களின் முன்பு வைப்பதற்கு நீங்கள் தயாரா? என்று கேட்டால் நம் நிலை என்னவாகும் ? என்பதை அறிந்து அவர்கள் கனத்த மவுனம் காக்கிறார்கள். இதற்கு ஆதரவாக ஏதேனும் சொல்லப்போனால் நம்மிடம் இருக்கும் ஒன்று இரண்டு சிறுபான்மை வாக்குகளும் சிதறிவிடுமே என்று பலரும் கள்ள மவுனம் காக்கிறார்கள்.
இதை எதிர்த்து ஏதேனும் அறிக்கை கொடுத்தால் அப்படியே கூட்டத்தை நம் பக்கம் திருப்பி நான் எந்த ஒரு மதத்தையும் இழிவு படுத்தியோ சிறுமைப்படுத்தியோ பேசவில்லை. மாறாக இந்து ஆன்மீக வழிபாட்டு முறைகளை அவமதிக்கும் ஒரு விவகாரத்தை அப்புறப்படுத்துவேன் என்று மட்டும்தான் சொன்னேன். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றால் இவர்கள் யார்? இவர்களின் நோக்கம் என்ன ? என்று அடுத்த விவாதத்தை அண்ணாமலை தொடங்கி வைத்தால் ஏற்கனவே உருவாகி இருக்கும் இந்து வாக்கு வங்கி இனி அசுர பலமாக மாறி அது மொத்தமாக பாஜகவின் பக்கம் நிலை பெறும். ஏற்கனவே திமுகவின் அடிமடியிலேயே ஆட்டம் கண்டு இருக்கும் நிலையில் இனி இது போல் தேவையில்லாத வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டாம் என்று தான் மேல்மட்டம் முதல் அடி வட்டம் வரை கனத்த மவுனம் காக்கிறார்கள்.
சனாதன ஒழிப்பு மாநாடு என்று நடத்தியவர்கள் இன்று அவர்கள் போக்கில் போய்க் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக போனவர்கள் நாடு முழுவதும் எதிர்ப்பு கண்டனம் வழக்குகளை சந்தித்து வருகிறார்கள். மறுபக்கம் தேசிய அரசியலில் இருந்து திமுக தனிமைப்பட தொடங்கி இருக்கிறது. இது போன்ற நெருக்கடியான சூழலில் தமிழக பாஜக தலைவர் திட்டமிட்டு எடுத்து வைக்கும் அடுத்த நகர்வை எதிர்க்கிறேன் என்ற பெயரில் களம் கண்டால் மொத்தமாக அவர் வைத்திருக்கும் பொறியில் கூட்டமாக அகப்பட வேண்டி வரும். அதன் பலன் திராவிடத்திற்கு மட்டுமல்ல. அதற்கு மறைமுகமாக சாமரம் வீசிக் கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் கட்சிகள் அரசியல் அமைப்புகள் ஊடகங்கள் ஊடகவாதிகள் போராளிகள் ஆர்வலர்கள் என்று அத்தனை பேரின் முகத்திரையின் கிழித்து தொங்கவிட்டு மொத்தமாக முடிவு கட்டிவிடுவார். அதன் முடிவு அசைக்க முடியாத அசுர வாக்கு வங்கியாக தமிழகத்தில் பாஜகவின் இந்து வாக்கு வங்கி உருவாகி இருக்கும் என்ற அச்சம் அவர்களின் ஒட்டுமொத்த கூட்டத்தையும் மௌனமாக்கி விட்டது.