எந்த கோவிலுக்கும் யார் வேண்டுமானாலும் போகலாம், தீண்டாமையை ஒழிக்க வேண்டும்- ஆர்எஸ்எஸ்   !

எந்த கோவிலுக்கும் யார் வேண்டுமானாலும் போகலாம், தீண்டாமையை ஒழிக்க வேண்டும்- ஆர்எஸ்எஸ் !

Share it if you like it

குஜராத் மாநிலம் வதோதராவில் ஆர்எஸ்எஸ் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் பொது செயலாளர் தத்தாத்ரேயா கலந்துகொண்டார். அதில் நாட்டில் எந்த இடத்தில் உள்ள கோவிலிலும் யார் வேண்டுமானாலும் போகலாம் அதற்கு உரிமை இருக்கிறது. சாதியின் பெயரிலோ தீண்டாமையின் பெயரிலோ பாகுபாடு காட்டுவதை நாம் சகித்து கொள்ளக்கூடாது. இத்தகைய பாகுபாடு ஒட்டுமொத்த இந்து சமூகத்துக்கும் அவமரியாதை ஏற்படுத்துகிறது. மக்களிடையே நிரந்தர ஒற்றுமை உணர்வை ஏற்படுத்த வேண்டும்.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர்களை நாம் என்ன சாதி என்ன மதம் என்று பார்க்கவில்லை. எந்த நாடும் செய்திடாத சாதனையை செய்து காட்டிய நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் என்ன சாதி என்ன மதம் என்று பார்க்கவில்லை. கொரோனா ஊரடங்கின்போது சாதி மதம் பார்க்காமல் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மக்கள் உதவினர். சிக்கலின்போதோ,வெற்றியின்போதோ ஒற்றுமையுடன் இருக்கிறோம்.இந்த ஒற்றுமை எப்போதும் இருக்க வேண்டும். இவ்வாறு அந்த கூட்டத்தில் பேசியுள்ளார்.


Share it if you like it