பெண்கள் போற்றும் அரசாக திராவிட மாடல் அரசு திகழுகிறது’ என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கொடுமுடி அருகே ஒத்தக்கடையில் திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து, தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வந்ததும், பெட்ரோல் விலை ரூ.3 குறைக்கப்பட்டது. கொரோனா காலத்தில் வீட்டிலேயே முடங்கி கிடந்தோம். பிரதமர் மோடி எந்த இழப்பீடும் தரவில்லை. பி.எம். கேர் நிதியாக வாங்கிய ரூ.32 ஆயிரம் கோடிக்கு கணக்கு இல்லை. கோவிட் வார்டு உள்ளேயே நேரடியாக சென்று ஆய்வு செய்த ஒரே முதல்வர் ஸ்டாலின் தான் என பேசியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக :-
சென்னை விருகம்பாக்கம் தசரதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த டிச. 31-ம் தேதி இரவு திமுக சார்பில், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக் கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 22 வயதுடைய பெண் காவலரிடம் திமுக இளைஞர் அணியை சேர்ந்த இருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘பெண் காவலரிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக சாலிகிராமத்தை சேர்ந்த பிரவீன் (23), சின்மயா நகரை சேர்ந்த ஏகாம்பரம் (24) ஆகியோரை பிடித்து விசாரித்து வருகிறோம். அவர்கள் இருவரும் 129-வது வட்ட திமுக இளைஞர் அணியை சேர்ந்தவர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது’’ என்றனர். இச்சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதுமட்டுமல்லாமல் வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பெண்களிடம் உங்கள் முகங்கள் எல்லாம் பளபளன்னு இருக்கு கிரீம், பான்ஸ் பவுடர் போட்டுருக்கீங்களா ? ஆயிரம் ரூவா வந்துருச்சா ? இவ்வாறு ஆபாசமாக பேசினார். இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த காணொளியை பார்த்த பெண்கள் பலரும் திமுகவை வறுத்தெடுத்தனர்.