திராவிட கட்சிகளை சேர்ந்தவர்கள் பெரியார் என்று அழைக்கப்படும் ராமசாமி நாயக்கர் தான் சாதியை ஒழித்தார், சமத்துவத்தை நிலைநாட்டினார் ஊர் ஊராக தம்பட்டம் அடித்து வருகின்றனர். இவர் சாதியை ஒழித்த சம்பவங்களை பார்க்கலாம்.
தீவட்டிப்பட்டி சம்பவம் :-
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டத்தில் உள்ளது தீவட்டிப்பட்டி கிராமம். இங்கு ஏறத்தாழ 500 குடும்பங்கள் உள்ளனர். இவர்கள் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். இந்த கிராமத்தின் அருகில் உள்ள நாச்சினம்பட்டி கிராமத்தில் 200 பட்டியலின குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்நிலையில், தீவட்டிபட்டி மாரியம்மன் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு நிலவியது. மாரியம்மன் கோவில் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மே 1 ஆம் தேதி இந்தாண்டிற்கான திருவிழா தொடங்கியது. ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் இந்த திருவிழா ஒரு வாரத்திற்கு நடைபெறும்.
இந்நிலையில், கோவிலில் வழிபடுவது தொடர்பாக ஆதிக்க சாதியினருக்கும் பட்டியலின மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரும் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம்சாட்டிய நிலையில், அரசு இருதரப்பையும் மே 2 ஆம் தேதி சமாதானப் படுத்த முயற்சித்தது. அன்று மதியமே இருதரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டு கலவரமாக மாறியது. கடைகள், வாகனங்கள் போன்ற அடித்து நொறுக்கப்பட்டு தீவைக்கப்பட்டன. பதற்றமான சூழலில் காவல்துறை தடியடி நடத்தி கவலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் சம்பவம் :-
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டை ஊராட்சிமன்ற தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி, இவர் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவர், அதே பஞ்சாயத்தில் திமுக சார்பில் ஊராட்சி மன்ற துணைத்தலைவராக இருப்பவர் மோகன்ராஜ், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவரான மோகன், தான் உயர் சாதிக்காரர் என்பதாலும், தனக்குள்ள சாதி வெறியாளும், ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி மற்றும் அதே சமூகத்தைச் சேர்ந்த வார்டு உறுப்பினர் சுகந்தி ஆகிய இருவரையும் ஊராட்சி மன்றக் கூட்டங்களில் இருக்கையில் அமரவிடாமல், தரையில் அமர வைத்து அவமரியாதை செய்துள்ளார். அதற்கான புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதே போல் ரஜேஸ்வரி தேசியக்கொடி ஏற்ற கூடாது எனவும் உத்தரவிட்டு ஒட்டுமொத்த ஊராட்சி மன்ற நிர்வாகத்தையும் மோகன்ராஜ் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும் ராஜேஸ்வரியை எந்த பணியும் செய்யவிடாமல் மோகன் தடுத்து அவமானப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
நாங்குநேரி சம்பவம் :
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பட்டியல் இன மாணவரை சக மாணவர்கள் வீட்டிற்கு சென்று அரிவாளால் அவரையும், அவர் தங்கையையும் தாக்கிய சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பள்ளிக்கரணை சம்பவம் :-
சென்னை பள்ளிகரணையில் வசித்து வந்த தலித் சமூகத்தை சேர்ந்த பிரவீன், மாற்று சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்டதால், அந்த பெண்ணின் சகோதரரால் கடந்த பிப்ரவரி மாதம் ஆணவக் கொலை செய்யப்பட்டார். கணவரை இழந்த ஷர்மிளா இரண்டு மாதங்கள் கழித்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருநெல்வேலி சம்பவம் :
திருநெல்வேலி மாவட்டம் மணி மூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பட்டியலின இளைஞர்களை ஆதிக்க சாதியைச் சேர்ந்த 6 இளைஞர்கள் நிர்வாணமாக்கி அவர்கள் மீது சிறுநீர் கழித்து கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோல் தமிழ்நாட்டில் மட்டுமே நிகழ்ந்த எண்ணற்ற சம்பவங்களை சொல்லி கொண்டே போகலாம். இதுதான் பெரியார் சாதியை ஒழித்த லட்சணமா ? இவ்வாறு நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பெரியாரின் பேரன்களை வறுத்தெடுத்து வருகின்றனர்.