ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமனை கைது செய்த போலீசார் !

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமனை கைது செய்த போலீசார் !

Share it if you like it

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 21 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், திருவேங்கடம் என்ற ரவுடி என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த நிலையில், ஐந்து நபர்களை ‘போலீஸ் கஸ்டடி’யில் எடுத்து செம்பியம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஆம்ஸ்ட்ரங்கை கொலை செய்ய மூளையாக செயல்பட்டது யார் என்ற விடையை கண்டுபிடிக்க மூன்றாவது முறையாக கஸ்டடியில் எடுத்து துருவி துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் கொலைக்கு முக்கிய நபராக பார்க்கக்கூடிய அருள் என்பவரிடம் விசாரணை மேற்கொண்ட போது செல்போனில் அடிக்கடி ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ள பிரபல ரவுடி நாகேந்திரன் என்பவரின் மகனும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியுமான வழக்கறிஞருமான அஸ்வத்தாமனிடம் பேசி வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து அஸ்வத்தாமனுக்கு சம்மன் கொடுத்து நேற்று இரவு முதல் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது அஸ்வத்தாமனை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் தெரிய வந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சோழவரம் பகுதியில் நிலம் தொடர்பான தகராறில் பணம் கேட்டு தொழிலதிபரை மிரட்டிய சம்பவத்தில் அஸ்வத்தாமனுக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் இடையே நேரடி பகை ஏற்பட்டுள்ளது. அஸ்வத்தாமன் தொழிலதிபரிடம் துப்பாக்கியை காட்டி ஆம்ஸ்ட்ராங்கையும், உன்னையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரோலில் வந்த நாகேந்திரன் ஆம்ஸ்ட்ராங்விடம் செல்போனில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது, முடியாது எனக்கூறி தொடர்பை துண்டித்ததாக கூறப்படுகிறது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *