ஜம்மு காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது வரலாறு என மத்திய அமைச்சர் சுகந்தா மஜும்தார் தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலம், கவுகாத்தியில் மத்திய அமைச்சர் சுகந்தா மஜும்தார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டுவரும் காங்கிரஸ் கூட்டணியின் நிலைப்பாட்டை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஆதரிப்பதாக தெரிவித்தார்.
மேலும், எவ்வளவு முயற்சி செய்தாலும் சட்டப்பிரிவு 370-ஐ திரும்ப கொண்டு வர அனுமதிக்க கூடாது எனவும் சுகந்தா மஜூம்தார் வலியுறுத்தினார்.