மீடியான் குடும்பத்தினற்கு வணக்கம்
டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியின் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கும் மிகப் பெரிய நிம்மதியை வழங்கினார்.
நாடே நீரஜ் சோப்ரா-வை தலையில் வைத்து கொண்டாடி வரும் இவ்வேளையில் பாரதப் பிரதமர் மோடி மீது உள்ள வன்மத்தால் கலைஞர் செய்தி ஜீன் 21-ம் தேதி ஆங்கில நாளேடு ஒன்றில் வந்த கட்டுரையின் அடிப்படையில் உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டு உள்ளது.
அச்செய்தியில் உவே ஹான் எனும் ஒருவர் நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளர் என்றும் அவர் Sports Authority of India மற்றும் Athletics Federation of India போன்ற அமைப்புகள் தங்களுக்கு எந்த ஒரு உதவியையும் செய்யவில்லை என்று கூறியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும் ஒலிம்பிக்கிற்கான பயிற்சி குறித்து மத்திய அரசிடம் எந்த ஒரு திட்டமும் கிடையாது, விளையாட்டு வீரர்களுக்கு உயர்தர உணவுகளை வழங்குவதில்லை, தமக்கு ஒத்துவராத விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு இந்திய அதிகாரிகள் தம்மை மிரட்டியதாகவும் உவே ஹான் குற்றச்சாட்டுகளை அடிக்க உள்ளார் என்று கலைஞர் செய்தி பல வடைகளை சுட்டுள்ளது.
ஆனால் ஆங்கில நாளிதழில் இந்த கட்டுரை வெளிவந்த அடுத்த நாளே நீரஜ் சோப்ரா இந்த செய்தியை முற்றிலும் மறுத்துள்ளார். இந்திய அரசாங்கம் தனக்கு செய்த உதவிகளை பட்டியல் இட்டது மட்டுமில்லாமல் பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார்.
மற்றொரு தகவல் என்னவென்றால் 2019-ஆம் ஆண்டு தோஹா-வில் நடைபெற்ற World Athletics Championship போட்டியில் பங்கேற்க நீரஜ் சோப்ரா தேர்வு பெறும் வாய்ப்பை தவற விட்டதால். சோப்ரா மற்றும் இந்திய அரசாங்கத்திற்கு உவே ஹான் மீது அதிருப்தி ஏற்பட்டது அதனை தொடர்ந்து ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு அவர் வீட்டுக்கு அனுப்பபட்டார்.
அதை தொடர்ந்து அன்று முதல் ஜெர்மனியை சேர்ந்த KLAUS BARTONIETZ எனும் பயோமெக்கானிக் நிபுணர், நீரஜ் சோப்ராவிற்கு பயிற்சி அளித்து வருகிறார். அதுமட்டுமின்றி கோடி கணக்கான ரூபாயை நீரஜ் சோப்ராவின் பயிற்சிக்காக மத்திய அரசு செலவு செய்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் பல வெளிவந்து கொண்டு இருக்கிறது.
ஆக தனது உதவியின்றி இந்தியா தங்க பதக்கம் வென்றுள்ளதை உவே ஹாங்கால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதை இதன் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் சொந்த நாட்டு வீரர் தங்க பதக்கம் வென்றுள்ளதை, தி.மு.க ஆதரவு பெற்ற ஊடகமான கலைஞர் தொலைக்காட்சியால் சகித்துக் கொள்ள முடியாது ஏன்? என்பது மக்களாகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நன்றி ;
ஜெய் ஹிந்த்..