பிரபல ஊடகமான நியூஸ் 18 நடத்திய மக்கள் சபை கூட்டம் ரகளையில் முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தமிழ்நாடு பெரியார் மண்ணா? ஆன்மீக மண்ணா? என்ற தலைப்பில் மக்கள் சபை கூட்டம் 18.6.2022 திருச்சி பிஷப் ஹீபர் பள்ளி விழா அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தி.மு.க எம்.எல்.ஏ கோவி. செழியன், திராவிடர் கழகத்தை சேர்ந்த அருள்மொழி மற்றும் கிறிஸ்தவ பாதிரியார் ஜெகத் கஸ்பர் உள்ளிட்டவர்கள் இது பெரியார் மண் என்ற தலைப்பிலும் இது ஆன்மீக மண் தான் என்ற தலைப்பில் பா.ஜ.க. பொதுச்செயலாளர் இராம.ஸ்ரீனிவாசன், ஆன்மீக பேச்சாளர் மணிகண்டன், தாம்ப்ராஸ் நாராயணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு, நடுவராக இருந்தவர் பா.தமிழரசன்.
இது பெரியார் மண் என்ற சார்பில் வழக்கறிஞர் அருள்மொழி பேசியுள்ளார். பேச்சின் இடையில், வழக்கம் போல ஹிந்து மதம் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் ஏதோ கருத்து ஒன்றினை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அருள்மொழியின் கருத்துக்கு எதிராக பார்வையாளர்கள் தங்களது கடும் கோவத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இதுதவிர, ”பாரத் மாதா கி ஜெய்’ என்ற கோஷம் தொடர்ந்து ஒலிக்க துவங்கி இருக்கிறது. இதையடுத்து, அருள்மொழியை தவிர மேடையில் இருந்த பலரும் பார்வையாளர்களை சமாதானப்படுத்தி மீண்டும் அமர வைத்து இருக்கின்றனர்.
அந்தவகையில், தி.மு.க எம்.எல்.ஏ கோவி. செழியன் மற்றும் கிறிஸ்தவ பாதிரியார் ஜெகத் கஸ்பர் பேசிய பொழுது இது பெரியார் மண் தான் என்று பொத்தாம் பொதுவாக பேசி விட்டு மீண்டும் தங்களது இருக்கையில் அமர்ந்து கொண்டனர் என்பது தான் ஹைலட்.
அமைதியாக கடந்து போக இது பழைய பா.ஜ.க அல்ல பதிலடியை (அண்ணாமலை போல) உடனே கொடுக்கும் புதிய பா.ஜ.க என்று இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தம்பி ஒருவர் குறிப்பிட்டு இருந்தார்.