ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை குறித்து தமிழக பா.ஜ.க மாநில செயலாளர் அஸ்வதாமன் தெளிவாக புரிய வைத்த காணொளி ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி-க்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வருவோம் என தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. ஆட்சி அமைந்து ஒரு வருடங்களை கடந்த பின்பும் கூட ஜி.எஸ்.டி குறித்து எதுவும் பேசாமல் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கள்ள மெளனம் சாதித்து வருகிறார். இது ஒருபுறம் இருக்க, இட்லிக்கு, சட்னிக்கு, ஜி.எஸ்.டி இருக்கு பெட்ரோலுக்கு ஏன்? ஜி.எஸ்.டி இல்லை என்று தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு பிரபல ஊடகமான தந்தி டிவியில் கேள்வி எழுப்பி இருந்தார். தேர்தல் வாக்குறுதியை கொடுத்த கட்சியே தி.மு.க. என்பதை மறந்து விட்டு டி.ஆர். பாலு கேள்வி எழுப்பிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஜி.எஸ்.டி குறித்து முரண்பட்ட கருத்தை கூறி பொது மக்களை குழப்பிய சம்பவம் நகைச்சுவையின் உச்சம்.
இப்படியாக, தி.மு.க அரசு தமிழக மக்களின் தலையில் தொடர்ந்து மிளகாய் அரைத்து வருகிறது. இதுதவிர, ஜி.எஸ்.டி நிலுவை தொகை பற்றி மத்திய அரசு மீது விடியா அரசு தொடர்ந்து அவதூறு பரப்பி வந்தன. இப்படிபட்ட சூழலில் தான், ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை குறித்து தமிழக பா.ஜ.க மாநில செயலாளர் அஸ்வதாமன் பிரபல இணையதள ஊடகமான ஆதன் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்;
ஜி.எஸ்.டி நிலுவை தொகை இருக்காம் அதை கொடுத்து விடுங்கள் சார் என நெறியாளர் மாதேஷ் கேட்க. நாங்கள் கொடுத்து விட்டோம் என அஸ்வத்தாமன் கூறினார். இப்ப தான் கொடுத்து இருக்கிறீர்கள். நேற்றைக்கு தான் அந்த செய்தியை நான் பார்த்தேன். அதையும் ரொம்ப நாட்களாக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் உள்ளிட்ட பலர் கேட்ட பிறகு இப்ப தான் வழங்கி இருக்கிறீர்கள் என நெறியாளர் கூறினார்.
நீங்கள் சென்னையில் சொந்த வீட்டில் இருக்கிறீர்களா? அல்லது வாடகை வீட்டில் இருக்கிறீர்களா? என அஸ்வத்தாமன் பதிலுக்கு கேட்க நான் வாடகை வீட்டில் தான் இருக்கிறேன் என மாதேஷ் பதில் அளித்தார். இந்த மாத வாடகையை 20-ஆம் தேதிய உங்க வீட்டு ஓனர் கேட்டால், நீங்கள் என்ன சொல்லுவீங்க. இந்த மாதம் சம்பளம் வரட்டுங்க, ஒன்னாம் தேதி தருகிறேன் என்று தானே கூறுவீர்கள். இதற்கு, நெறியாளர் ஆமாம் என்று பதில் அளித்தார். 20-ஆம் தேதியே வந்து உங்கள் வீட்டு ஓனர் 20 நாள் வாடகை பெண்டிங் இருக்கு என்று கேட்டால். அது எப்படி, அதை உடனே கேட்டால் கொடுக்க முடியும் என நெறியாளர் பதில் அளித்தார். அது தான் ஜி.எஸ்.டி என அஸ்வத்தாமன் மாஸ் விளக்கம் கொடுத்து உள்ளார். மேலும் விவரங்களுக்கு அக்காணொளியின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.