அஸ்ஸாமில் போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்து சமூக விரோதிகளுக்கு வழங்கிய பரூக் கான், அப்துல் அலி, சஹிதுல் இஸ்லாம் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
அஸ்ஸாமில் சுமார் 19 லட்சம் ‘டி’ வாக்காளர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. டி வாக்காளர் என்பது சந்தேகத்திற்குரிய வாக்காளர் என்று குறிப்பிடப்படுகிறார்கள். அதாவது, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து ஊடுருவியவர்கள். இவர்களிடம் முறையான குடியுரிமைச் சான்றுகள் இல்லாத காரணத்தால் டி வாக்காளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது. இவர்களில் முஸ்லீம் மட்டுமல்லாது ஹிந்துக்களும் அடக்கம். இவர்களை தடுப்பு முகாம்களில் வைக்கவும், இவர்கள் தொடர்பான வழக்குகளை வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களுக்கு மாற்றவும் கோர்ட் உத்தரவிட்டிருக்கிறு.
இந்த நிலையில், மேற்கண்ட டி வாக்காளர்களுக்கு போலியாக வாக்காளர் அடையாள அட்டை தயாரித்து விநியோகித்து, மோசடியில் ஈடுபட்டதோடு, பணமும் சம்பாதித்து வந்திருக்கிறது ஒரு கும்பல். இதன் காரணமாக, அஸ்ஸாம் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் திடீரென வாக்காளர் எண்ணிக்கை உயரத் தொடங்கியது. இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தியபோதுதான் டி வாக்காளர்களுக்கு போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்து வழங்கப்பட்டு வரும் விஷயம் தெரியவந்தது. எனவே, போலியை ஒழிக்கும் முயற்சியில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இறங்கினார்.
அந்த வகையில், அஸ்ஸாம் மாநிலம் பார்பெட்டா மாவட்டத்தில் போலி வாக்காளர் அடையாள அட்டை புழங்குவதாக மாவட்ட தேர்தல் அதிகாரி மயூரக்ஷி தத்தா போலீஸில் புகார் அளித்தார். இதன் பேரில் மாவட்டத்தில் 3 இடங்களில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது, சப்ரா கிராமத்தில் வாக்குச்சாவடி அதிகாரி உதவியுடன், பரூக் கான் என்பவன் போலி வாக்காளர் அடையாள அட்டைகளை அச்சடித்து டி வாக்காளர்களுக்கு வழங்கி வருவது தெரியவந்தது.
இதையடுத்து, பரூக் கானை கைது செய்த போலீஸார், அவனிடமிருந்து 262 போலி வாக்காளர் அடையாள அட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும், பரூக்கானுக்கு உடந்தையாக இருந்த அப்துல் அலி, சஹிதுல் இஸ்லாம் ஆகியோரையும் கைது செய்தனர். அதோடு, போலி வாக்காளர் அடையாள அட்டை அச்சடிக்கப் பயன்படுத்திய லேப்டாப், டெஸ்க்டாப், பிரிண்டர் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.