இந்து நிர்வாகி படுகொலை : தமிழகத்தில் இந்துக்களுக்கு பாதுகாப்பில்லையா ?

இந்து நிர்வாகி படுகொலை : தமிழகத்தில் இந்துக்களுக்கு பாதுகாப்பில்லையா ?

Share it if you like it

சென்னையில் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி மாநிலத் தலைவர் மர்ம நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த மாங்காடு அம்பாள் நகர் கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் ராஜாஜி. இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணியின் தலைவராக இருந்து வந்தார். இவரது மனைவி கலா இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை குமணன்சாவடியில் உள்ள டீக்கடையில் அமர்ந்து டீ குடித்து கொண்டிருந்தார்.

அப்போது லுங்கி மற்றும் பனியன் அணிந்தபடி டீக்கடைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ராஜாஜியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து சர்வ சாதாரணமாக தப்பினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜாஜி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தை கண்டதும் கடைக்குள் மற்றும் வெளியே இருந்த பொதுமக்கள் அலறி அடித்தபடி நாலா புறமும் சிதறி ஓடினார்கள்.

இது குறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி போலீசார் கொலை செய்யப்பட்ட ராஜாஜி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜாஜி கொலை செய்யப்பட்ட தகவல் பரவியதையடுத்து அவரது குடும்பத்தினரும் கட்சி நிர்வாகிகளும் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ராஜாஜியின் கொலைக்கான காரணம் என்ன கொலையாளி யார் என்பது குறித்து கடைக்குள் பதிவாகியிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளில் நடந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *