தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் நகை கடை நடத்தி வருபவர் பிரபு. இவர் அரூரை சேர்ந்த திமுக தொண்டரணி நிர்வாகி ஜெயா என்பவரிடம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் வாங்கிய கடன் முழுவதையும் வட்டியுடன் திருப்பி ஜெயாவிற்கு திருப்பி கொடுத்துள்ளார். இதனை அடுத்து கடனுக்கு ஈடாக தான் கொடுத்த வங்கி காசோலை மற்றும் பத்திரங்களை பிரபு திருப்பி கேட்டபோது, அதனை 20 நாளில் திருப்பி தருவதாக கூறியுள்ளார் திமுக நிர்வாகி ஜெயா. ஆனால் வங்கி காசோலை மற்றும் பத்திரங்களை திருப்பி தராமல் அடி ஆட்களுடன் பிரபுவின் நகை கடைக்கு சென்று 5 கோடி கேட்டு மிரட்டி உள்ளார்.
இதனால் வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் ஜெயா தனது செல்போனை பிரபுவின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதனை அடுத்து திமுக நிர்வாகியால் பாதிக்கப்பட்ட பிரபு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.