மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தில் உள்ள முலாவா பகுதியில் அஹில்யாபாய் ஹோல்கர் ஜெயந்தியையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்துக்களின் பேரணி மீது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த மே 31ஆம் தேதி அஹில்யாபாய் ஹோல்கர் ஜெயந்தி நாடு முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள முலாவா பகுதியில் அஹில்யாபாய் ஹோல்கர் ஜெயந்தியை முன்னிட்டு அப்பகுதி ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றுகூடி பேரணி நடத்தினர். பேரணியில் பங்கேற்றவர்கள் திப்பு சுல்தான் சவுக்கில் சென்ற போது திடீரென இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பலர் ஹிந்துக்கள் மீதும் அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்த காவல்துறையினர் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலினால் ஹிந்துக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உட்பட பலர் காயமடைந்தனர். பேரணியில் இருந்த சிறுவர்கள் உட்பட பல இந்துக்கள் பலத்த காயம் அடைந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தனர்.
புகார் நகலின்படி, தாக்குதல் நடத்தியவர்கள், இஸ்லாமிய அடிப்படைவாதிகளான ஷேக் சாஹில் ஷேக் இர்ஷாத், ஷேக் மொஹ்சின் ஷேக் கஃபர், ஷேக் சரவார், இலியாஸ் அகமது அப்துல் காதர், முகமது நவீர் அப்துல் கஃபர், சையத் மஜித் சையத் கனி, அஜீஸ் கான், குலாப் கான் ஆகியோர் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர்வாசிகள் சிலரிடம் பேசியபோது அவர்கள் கூறியதாவது :- முஸ்லிம்கள் மிகவும் திட்டமிட்டு இந்த சம்பவத்தை செய்துள்ளனர். ஏனெனில் சம்பவம் நடந்த பகுதியில் சிமென்ட் செய்யப்பட்ட சாலைகள் உள்ளன, மேலும் சாலையோரங்களில் கற்களைக் கண்டுபிடிக்க வழி இல்லை. அவர்கள் அருகிலுள்ள மளிகைக் கடைக்கு அருகில் கற்களுடன் தயாராக இருந்தனர் மற்றும் பேரணி திப்பு சுல்தான் சவுக்கை அடைந்தவுடன் உடனடியாகத் தாக்கத் தொடங்கினர், ”என்று பெயர் தெரியாத நிலையில் உள்ளூர்வாசிகளில் ஒருவர் கூறினார்.
மற்றொரு உள்ளுர்வாசி, தாக்குதலுக்கு முன் தெருவில் இருந்த விளக்குகளை அணைத்துவிட்டு, யார் கற்களை வீசினார்கள் என்று யாருக்கும் தெரியாமல் இருக்க முஸ்லீம்கள் இவ்வாறு திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று கூறினார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து யவத்மால் எஸ்பி பவன் பன்சோட், முதன்மை ஆய்வாளர் பியூஷ் ஜக்தாப் மற்றும் ஹனுமந்த்ராவ் கயக்வாட் ஆகியோர் ஜூன் 1 ஆம் தேதி அப்பகுதிக்கு சென்றனர். குடிமக்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உங்கள் வேலைகளை தொடருங்கள். வதந்திகளை நம்ப வேண்டாம். இதுகுறித்து விசாரித்து வருகிறோம். பேரணியின் போது கற்களை வீசி தாக்குதல் நடத்திய 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகள் நடந்து வருகின்றன” என்று எஸ்பி பன்சோட் கூறினார்.