அவதார் படத்தின் 2-ஆம் பாகம் வெகுவிரைவில் திரைக்கு வர உள்ளது. அந்த வகையில், இப்படம் வெளியாகும் தேதி தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக புகழ் பெற்ற திரைப்பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அவதார். இப்படம், உலகம் முழுவதும் பெரும் வரவேற்பினை பெற்று இருந்தது. இதுமட்டுமில்லாது, வசூலில் வரலாற்று சாதனையை படைத்து இருந்தது. அந்த வகையில், நேற்றைய தினம் 27.4.2022 அமெரிக்காவின் லாஸ் வேகாசில் நடைபெற்ற சினிமாகான் என்ற நிகழ்ச்சியில் இப்படத்தின் போஸ்டர்களும், டிரைலரும் வெளியிடப்பட்டன.

இதையடுத்து, வரும் 6-ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் அவதார் படத்தின் முன்னோட்ட காட்சிகள் திரையிடப்படும் என செய்தி வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு, அவதார் – தி வே ஆப் வாட்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.