அவிநாசி டூ கர்நாடகா… 12 அடி உயர காளி சிலை!

அவிநாசி டூ கர்நாடகா… 12 அடி உயர காளி சிலை!

Share it if you like it

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட 12 அடி உயர கோல்கட்டா காளி சிலை, கர்நாடக மாநிலத்திற்குச் செல்கிறது.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் சாந்திராம கிராமம் அமைந்திருக்கிறது. இங்குள்ள கோயிலில் பிரமாண்ட காளி சிலையை பிரதிஷ்டை செய்ய கோயில் நிர்வாகத்தினர் முடிவு செய்திருக்கின்றனர். இதற்காக, திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் உள்ள சிற்பக் கலைக்கூடத்தில் ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த 6 மாதமாக 6 சிற்பிகள் சிலை தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர். தற்போது, சிலை பூர்த்தியாகி பிரதிஷ்டைக்கு தயாராக இருக்கிறது. இதில், சிறப்பம்சம் என்னவென்றால், இச்சிலை ஒரே கல்லில் உருவாக்கப்பட்டது என்பதோடு, 12 அடி உயரம் கொண்டது என்பதுதான்.

இச்சிலையின் வடிவமைப்பு குறித்து ஸ்தபதிகள் சிவக்குமார், வீரபத்ரன் ஆகியோர் கூறுகையில், “கோல்கட்டா காளி சிலையில் 10 தலைகளும், ஏகசூலம், சங்கு, கதை, ரத்தக் கிண்ணம், அரக்கன் தலை, கத்தி, சாட்டை, வில் அம்பு, டமாரம் ஆகியவை உட்பட பல ஆயுதங்கள் இருக்கின்றன. இச்சிலை சிவ ரூபத்தில் வந்த கொடூர அரக்கனை காலடியில் போட்டு மிதித்திருப்பது போல 12 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சிலை, அக்டோபர் 23-ம் தேதி லாரி மூலம் கர்நாடகா கொண்டு செல்லப்படுகிறது. இச்சிலை விரைவில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது” என்றார்கள்.


Share it if you like it