Behindwoods Senior Lead Anchor-ஆக உள்ள ஆவுடையப்பன் பிரபல இணையதள ஊடகமான சாணக்கிய நிறுவனர் பாண்டேவிடம் அண்மையில் நடத்திய நேர்காணல் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விடியல் ஆட்சியில் நிகழும், அட்டூழியங்கள், அடாவடிகள், குறித்த செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பல முன்னணி ஊடகங்கள் இன்பநிதி, உதயநிதி, தி.மு.க மற்றும் முதல்வர் ஸ்டாலினிற்கு அதிக முக்கியத்துவத்தை இன்று வரை கொடுத்து வருகிறது என்பது கசப்பான உண்மை.
பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு தமிழகத்திற்கு செய்து வரும் பல நன்மைகளை, திட்டமிட்டே மறைத்து வரும் முன்களப்பணியாளர்கள் மத்தியில், சாணக்கியா இணையதள ஊடகம் பாரதப் பிரதமர் மோடி செய்த சாதனைகள் பற்றி அண்மையில் பேச்சு போட்டி ஒன்றினை நடத்தி மக்களிடம் மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க-வின் தீவிர ஆதரவாளரும், Behindwoods Senior Lead Anchor உள்ள ஆவுடையப்பன் அவர்கள் பாண்டேவிடம் சமீபத்தில் நடத்திய நேர்காணல் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.






