ஜனவரி 22 ஆன இன்று அயோத்தியில் ராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டை நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் மண்டபங்களில் பஜனைகள் பாடுவது / ராம நாமம் சொல்வது / அன்னதானம் செய்வது பூஜைகள் செய்வது ஆகியவற்றிக்கு ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு தடை விதித்திருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் கோவில்களில் பஜனைகள், ராம நாமம் உச்சரிக்க அன்னதானம் செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
பஜனைகள் பாடுவது / ராம நாமம் சொல்வது / அன்னதானம் செய்வது தடை செய்யப்படவில்லை. இவை அனைத்தும் இன்று எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாமல் பொறுப்புடனும் பக்தியுடனும் செய்யப்படும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். தவறான தகவல் மற்றும் கருத்துக்களை பரப்புவதற்கு அனுமதிக்ககூடாது. இது சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினராலும் மனதில் கொள்ளப்படும். கடவுள் பக்தி என்பது அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் மட்டுமே அன்றி சமூகத்தில் நிலவும் சமநிலையை சீர்குலைப்பதற்காக அல்ல என்பதை சம்பந்தப்பட்ட அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.
இந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்குள் இதுபோன்ற செயல்பாடுகள் நடத்த திட்டமிடப்பட்டால், சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும், மேலும் விதிக்கப்படும் நியாயமான நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்படும்.ராமர் கோவில் திறப்பை தனியார் கோவில்களில் நேரலை செய்யவோ பூஜைகள் செய்யவோ போலீசார் அனுமதி தேவையில்லை. இவ்வாறு சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.