சமீபத்தில் அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் திறந்து ஆறு மாதங்கள் கூட ஆகாத நிலையில், முதல் பருவ மழைக்கே மேற்கூரையில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், இப்படியெல்லாம் நடக்கும் என்று எவரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். குறிப்பாக ராமர் சிலை அமைந்துள்ள இடத்தின் அருகில் கூரையில் கசிவு ஏற்படுவது பக்தர்களுக்கு கவலை தந்திருப்பதாகவும். ஒட்டுமொத்தமாய் அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் மற்றும் அவற்றின் செயல்முறைகள் மீது குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்நிலையில் ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையானது செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மழைக்காலத்தில் ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலின் மேற்கூரையில் இருந்து தண்ணீர் சொட்டுவது தொடர்பான செய்திகளின் பின்னணியில் உள்ள உண்மைகள் :
பகவான் ராம்லாலா அமர்ந்திருக்கும் கருவறையில், மேற்கூரையிலிருந்து ஒரு சொட்டு நீர் கூட சொட்டவில்லை, எந்த இடத்திலிருந்தும் கருவறைக்குள் தண்ணீர் நுழையவில்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.