ஸ்ரீ ராமஜென்ம பூமி கோவில் என்பது கோடிக்கணக்கான ஹிந்துக்களின் பக்தியின் அடையாளமாக விளங்குவதோடு, ஹிந்துக்களின் பெருமையாகவும் விளங்குகிறது என்பது நிதர்சனம்…
கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டு வரும் ஹிந்து சமுதாயத்தை தொடர்பு கொள்ள, நாடு முழுவதிலும் இருந்து துறவிகளும், பல்வேறு அமைப்புகளும் இப்புனித பணியில் ஈடுபட உள்ளனர்..
இது தொடர்பாக, மகர சங்கராந்தி 15 ஜனவரி முதல் மாசி பௌர்ணமி தினமான 27 பிப்ரவரி வரை மாபெரும் மக்கள் தொடர்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. கோவில் கட்டும் பணியில் எவ்வாறு பக்தர்கள் பங்கேற்க முடியும் என்பது குறித்து விளக்குவதுடன், அவர்களிடம் இருந்து நன்கொடைகளும் பெறப்படும். இதன் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் விதத்தில் ரூ. 10, ரூ.100 மற்றும் ரூ. 1,000 மதிப்பிலான கூப்பன்கள் மற்றும் ரசீது புத்தகங்கள் தன்னார்வலர்கள் வசம் இருக்கும்.
பூஜனிய காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பூஜ்ஜிய பேரூர் மருதாசல அடிகளார் சுவாமிகள் மற்றும் இதர சைவ வைணவ மடங்களின் பெரியோர்களும் இந்த ஆலய மக்கள் தொடர்பு நிதி சேகரிப்பு இயக்கத்தில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..