தமிழ்நாட்டில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றும் நடவடிக்கையில் அரசு தீவிரம் காட்டியது. பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக, ‘மீண்டும் மஞ்சப்பை’ எனும் இயக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021-ம் ஆண்டு தொடங்கி வைத்தார்.
பொதுமக்களும் மஞ்சப் பைகளை எளிதாக பெறும் வகையில் தமிழ்நாட்டின்பல் வேறு மாவட்டங்களில், 92 இடங்களில் மஞ்சப்பை தானியங்கி எந்திரங்கள் மையம் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான ஐகோர்ட்டு வளாகம், கோயம் பேடு மார்க்கெட், ராஜல் காந்தி அரசு ஆஸ்பத்திரி உட்பட பல இடங்களில் மஞ்சப்பை தானியங்கி எந்திரம் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு எந்திரத்திலும் 500 மஞ்சப்பைகள் உள்ளன. 10 ரூபாய் செலுத்தி மஞ்சப்பை பெற்றுக்கொள்ளலாம்.
இந்தநிலையில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள எலியட்ஸ் கடற்கரையில், பிளாஸ் டித் பயன்பாட்டை குறைக்கும் வகையில் புதிதாக மஞ்சப்பை தானியங்கி எந்திரம் மையம் அமைக்கப்பட்டது. முழுக்கமுழுக்க சூரியஒளி மின்சார சக்தியுடன் இயங்கும் இந்த மஞ்சப்பை மையத்துக்கு, இளைஞர்கள், மாணவர்கள், குடும்பத்தினர் அதிகளவு வருகை தருகின்றனர். மையத்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மஞ்சப்பை தானியங்கி எந்திரத் தில் ரூ.10 நாணயமாகவும். நோட்டாகவும் செலுத்தினால் போதும், தானாகவே மஞ்சப்மப வெளியே வரும். இதில், தமிழ்நாடு அரசின் முத்திரையும், ‘மீண்டும் மஞ்சப்பை’ தமிழ்நாடு மாக கட்டுப்பாட்டு வாரியம்’ என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. மையத்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளிடம், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குறித்தும் அதற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்தும் பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.