17, 18 தேதிகளில் பஜ்ரங்தள் நாடு தழுவிய போராட்டம்!

17, 18 தேதிகளில் பஜ்ரங்தள் நாடு தழுவிய போராட்டம்!

Share it if you like it

ஜிகாதிகளால் ஹிந்துக்கள் தாக்கப்படுவதையும், கொல்லப்படுவதையும் நிறுத்த வலியுறுத்தி நாளையும், நாளை மறுநாளும் பஜ்ரங்தள் சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று வி.ஹெச்.பி. மத்திய இணைப் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேந்திர ஜெயின் தெரிவித்திருக்கிறார்.

அஸ்ஸாம் மாநிலம் கரீம்கஞ்ச் மாவட்டம் பதர்கண்டி துணைப் பிரிவின் லோவரிபுவா பகுதியைச் சேர்ந்தவர் சம்பு கொய்ரி. 10-ம் வகுப்பு மாணவரான இவர், விஷ்வ ஹிந்து பரிஷத்தின் இளைஞர் பிரிவான பஜ்ரங்தளத்தில் தன்னார்வத் தொண்டராக இருந்தார். இந்த சூழலில், பஜ்ரங்தள் சார்பில் ஹைலகண்டி மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 3 நாள் பயிற்சி முகாமுக்குச் சென்றுவிட்டு, கடந்த 8-ம் தேதி ஊர் திரும்பி இருக்கிறார் சம்பு. இரவு 8 மணியளவில் லோவரிபுவா பகுதியில் சம்பு வந்து கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த அனிமுல் ஹக் என்கிற ஜிகாதி, சம்புவை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டான்.

இதையடுத்து, ஜிகாதிகளால் ஹிந்துக்கள் தாக்கப்படுவதையும், கொலை செய்யப்படுவதையும் கண்டித்தும், தடுக்க வலியுறுத்தியும் பஜ்ரங்தள் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக வி.ஹெச்.பி. மத்திய இணைப் பொதுச் செயலாளர் டாக்டர். சுரேந்திர ஜெயின் கூறுகையில், “கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் பஜ்ரங்தளத்தின் 9 காரியகர்த்தாக்கள் ஜிகாதிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 32 பேர் தாக்கப்பட்டிருக்கிறார்கள். பஜ்ரங்தளம் அரசியல் சாசன மற்றும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுவது பலவீனத்தின் வெளிப்பாடு என்று ஜிகாதி வெறி பிடித்தவர்கள் கருதுவதாகத் தெரிகிறது.

தேசியவாத இளைஞர்கள் பிற்போக்குத்தனமாக ஒரு நகர்வை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டால், அதன் முழுபொறுப்பும் முல்லாக்கள், மதகுருமார்கள் மற்றும் அடிப்படைவாதத் தலைவர்களான ஒவைசி போன்றவர்களின் நச்சுப் பேச்சுகளும், ஜிகாதி அவதூறுகளும்தான் காரணமாகும். தற்போது, ஜிகாதி வெறித்தனம் தேசியவாத சமுதாயத்திற்கு நாடு தழுவிய சவாலாக மாறி இருக்கிறது. எனவே, ஜனவரி 17 மற்றும் 18 ஆகிய தேதிதளில் பஜ்ரங் தளம் நாடு முழுவதும் உள்ள மாவட்ட மையங்களில் ஆர்ப்பாட்டம் செய்து, ஜனாதிபதிக்கு குறிப்பாணையை சமர்ப்பிக்கப்படும்.

மேலும், ஹிந்து தலைவர்களை தாக்க ஜிஹாதிகள் புதிய உத்தியை கையாண்டு வருகின்றனர். அதாவது, மதரஸா பாஸ் அவுட் சிறார்களையும், கசாப்பு பயிற்சி பெற்ற சிறார்களையும் சேர்த்துக் கொள்கிறார்கள். எனவே, இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் ‘மைனர்கள்’ என்று அழைக்கப்படுபவர்களை ‘வயது வந்தவர்கள்’ போன்று தண்டிக்க சிறார்களுக்கான சட்டத்தில் நிரந்தர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஜனாதிபதிக்கு வலியுறுத்தப்படும். அதோடு, ஹிந்துக்களுக்கும் நாட்டிற்கும் எதிராக ஒரு வகையான போரை ஜிஹாதிகள் தொடங்கி இருக்கிறார்கள். ஆகவே, நமது உயிர், உடைமை, தாய், சகோதரிகள், மகள்கள் மற்றும் நாட்டை பாதுகாக்க, ஹிந்துக்கள் அனைவரும் எப்போதும் விழிப்புடன், எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்று வி.ஹெச்.பி. ஹிந்து சமுதாயத்தை எச்சரிக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.


Share it if you like it