அயோத்தி கோவில் கும்பாபிஷேகத்தின்போது மது விற்பனைக்கு தடை !

அயோத்தி கோவில் கும்பாபிஷேகத்தின்போது மது விற்பனைக்கு தடை !

Share it if you like it

அயோத்தி கோயில் கட்டுமானப்பணியின் இறுதிக்கட்டப்பணிகளும் முழுவேகத்தில் நடந்து வருகின்றன. கருவறையின் பிரதான வாயில் கதவு நேற்று பொருத்தப்பட்டுள்ளது. இக்கதவு 12 அடி உயரத்தில் 8 அடி அகலத்தில் தேக்கு மரத்தில் செய்யப்பட்டு தங்கத் தகடுகளால் போர்த்தப்பட்டுள்ளது. அடுத்த சில நாள்களில் மேலும் 13 தங்கக் கதவுகள் பொருத்தப்பட இருக்கின்றன. தங்கக் கதவுகள் அனைத்தும் கருவறை இருக்கும், மேல் தளத்தில் பொருத்தப்பட இருக்கிறது என்று கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

கோயில் முழுக்க மொத்தம் 46 கதவுகள் பொருத்தப்பட இருக்கின்றன. இதில் 42 கதவுகள் 100 கிலோ தங்கத்தில் செய்யப்பட்டுள்ளது. கதவுகள் அனைத்தும் தங்கத் தகடுகளால் போர்த்தப்பட்டுள்ளது. கோயில்களுக்கான கதவுகள் செய்யும் தச்சர்கள் தமிழகத்தில் இருந்து அயோத்திக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தமிழக ஊழியர்கள் அயோத்தியில் தற்காலிக முகாம் அமைத்து, கோயிலுக்கான கதவை உருவாக்கி வருகின்றனர்.

கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படும் ராமர் சிலை கர்நாடகாவில் செய்யப்பட்டது. அருகில் உள்ள தமிழர்களின் கைவண்ணத்தில் கோயில் கதவுகள் உருவாகிறது. கோயில் சுவர்கள் மற்றும் தூண்களில் ராமாயாண நிகழ்வுகள் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது. 161 அடியில் மூன்று அடுக்குகளாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் 392 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இரும்பு இல்லாமல் கற்களால் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் ஐந்து பண்டபங்கள் இடம் பெற்றுள்ளது. கோயில் நுழைவு வாயிலில் யானைகள், சிங்கம், ஹனுமான், கருடன் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. 22-ம் தேதி அயோத்தியில் அரசு விடுமுறை விடப்பட்டது. அன்றைய தினம் மது விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Share it if you like it