ஜாகிர் நாயக்கிற்கு தடை : மோடி செய்தது சரியே முகமது தவ்ஹிடி பாராட்டு..!

ஜாகிர் நாயக்கிற்கு தடை : மோடி செய்தது சரியே முகமது தவ்ஹிடி பாராட்டு..!

Share it if you like it

இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கிற்கு இந்தியா தடை விதித்து இருப்பதை இமாம் முகமது தவ்ஹிடி வரவேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய மக்களின் பெரும் மதிப்புக்குரியவராக திகழக்கூடியவர் இமாம் தவிடி. இவர், வழக்கறிஞர், எழுத்தாளர் என பன்முகதன்மை கொண்டவர். இதுதவிர, உலகம் முழுவதும் அமைதி, சகோதரத்துவம், பரவ வேண்டும் விரும்ப கூடியவர். இவரின் ஆழமான பேச்சின் மூலம், மனித இனத்திற்கு தன்னால் இயன்ற, சேவை செய்து வருகிறார். அவ்வபொழுது, இந்தியாவின் சேவையை மனம் திறந்து பாராட்டும் நபராகவும் இருந்து வருகிறார். ஆனால், இவரின் பேச்சு, எழுத்து, பிடிக்காத சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இவரது உயிருக்கு குறிவைத்துள்ளனர் என்பதே நிதர்சனமான உண்மை.

அமைதியான முஸ்லிம்கள் மோடியை நேசிக்கிறார்கள். பயங்கரவாதிகள் இல்லை என்று தனது வெளிப்படையாக கூறியவர். இதுதவிர, காஷ்மீர் இந்தியாவின் சொத்து என்று கூறி பாகிஸ்தானை டென்ஷன் ஏற்றியவர். பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் இரண்டும் இந்தியாவைச் சேர்ந்தவை, இந்தியா இஸ்லாத்தை விட பழையது, நேர்மையாக இரு என பாகிஸ்தானுக்கு அறிவுரை வழங்கியவர். ஒவ்வொரு இஸ்லாமிய பயங்கரவாதியும் இந்தியாவை வெறுக்கிறார்கள் என்பது என்னை இந்தியாவை இன்னும் அதிகமாக நேசிக்க வைக்கிறது என்று வெளிப்படையாக கருத்து தெரிவித்தவர்.

இதனிடையே, மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக். இனவாதம் மற்றும் நாட்டில் பயங்கரவாதத்தைத் தூண்டும் சட்டவிரோத செயல்களில் இவர் ஈடுபடுவதாக மத்திய அரசு இவர் மீது கடும் குற்றச்சாட்டினை முன் வைத்தது. இதுதவிர, கடந்த 2016 ஜூலை மாதம் டாக்காவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இவர் மூளையாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் தான், இமாம் முகமது தவ்ஹிடி,

ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையை இந்தியா சட்டவிரோதமாக்கியுள்ளது. நாயக் தற்கொலை குண்டுவெடிப்பை நியாயப்படுத்தியுள்ளார். ஒசாமா பின்லேடனை இவர் ஆதரித்தவர். “ஒவ்வொரு முஸ்லிமும் பயங்கரவாதியாக இருக்க வேண்டும்” என்று கூறினார் எனவே இந்தியா செய்தது சரி என்று மோடி அரசை வெகுவாக பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it