உக்ரைன் விவகாரத்தில் மீடியாக்கள் கட்டவிழ்த்து விடும் புளுகுமூட்டைகளை நெட்டிசன்கள் அம்பலப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், க்ரீன் ஸ்கிரீன் கிராபிஃக்ஸ் மூலம் பொய்யான வீடியோ செய்தியை வெளியிட்ட பி.பி.சி. தமிழ் செய்திச் சேனல், நெட்டிசன்களால் தோலுரிக்கப்பட்டு, மக்கள் மத்தியில் அசிங்கப்பட்டு நிற்கிறது.
உக்ரைனில் போர் நடந்துவரும் நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்ற பகீரத முயற்சி மேற்கொண்டிருக்கிறது பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு. இதற்காக, ஆபரேஷன் கங்கா என்கிற பெயரில் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு, இந்தியர்களை விரைவாக மீட்கும் பொருட்டு 4 மத்திய அமைச்சர்களும் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். பாரத பிரதமர் மோடியின் இத்தகைய நடவடிக்கையை பார்த்த பிறகுதான், மற்ற நாடுகளும் தங்களது நாட்டு பிரஜைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன.
ஆனால், இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு அசட்டையாக இருப்பதுபோல சில ஊடகங்கள் செய்தியை திருத்தி வெளியிட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழக உ.பிஸ். அடிமை மீடியாக்கள்தான் இத்தகைய பிராடு பித்தலாட்ட வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், பி.பி.சி. தமிழ் தொலைக்காட்சியும் ஒரு செய்தியை திரித்து வெளியிட்டு, மக்கள் மத்தியில் அசிங்கப்பட்டு நிற்கிறது. அதாவது, உக்ரைன் நாட்டுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற ஒரு மாணவியிடம் பேட்டி காணப்படுகிறது. அந்த மாணவியும், நாங்கள் பகட்டுக்காக வெளிநாடு சென்று படிக்கவில்லை. இந்தியாவில் இடம் கிடைக்காததால்தான் வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கிறோம் என்று கூறுவதோடு, உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் படும் கஷ்டத்தை பின்னணியில் காட்டுகிறார்.
இந்த வீடியோவில்தான் பி.பி.சி. தமிழ் தனது பித்தலாட்ட வேலையை காட்டி இருக்கிறது. அதாவது, அந்த மாணவி சம்பவ இடத்திலிருந்து லைவ் பேட்டி தருவதுபோல காட்டியிருக்கும் பி.பி.சி. தமிழ் செய்திச் சேனல், பின்னணியில் காட்டும் காட்சிகளை க்ரீன் ஸ்கிரீன் கிராபிஃக்ஸ் மூலம் சித்தரித்திருக்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், க்ரீன் ஸ்கிரீன் என்னும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தித்தான் சினிமாவில் பிரமாண்ட காட்சிகள் எடுக்கப்படுகின்றன. அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தித்தான் பி.பி.சி. தமிழ் செய்திச் சேனலும், மேற்படி வீடியோவை எடுத்து உண்மையான காட்சிகள் போல வெளியிட்டிருக்கிறது.
ஆனால், கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் மட்டுமே என்பதுபோல, பி.பி.சி. தமிழ் செய்திச் சேனலின் வீடியோ காட்சிகள் சித்தரிக்கப்பட்டவை என்பதை சமூக ஆர்வலர்களும், நெட்டிசன்களும் கண்டுபிடித்து விட்டனர். இதையடுத்து, க்ரீன் ஸ்கிரீன் கிராபிஃக்ஸ் மூலம் காட்சிகள் சித்தரிக்கப்படுவதை காட்சிப்படுத்தி, பி.பி.சி.யின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தி இருக்கிறார்கள். இதனால், பி.பி.சி. தமிழ் மக்கள் மத்தியில் அசிங்கப்பட்டு நிற்கிறது. இதேபோலதான், தமிழகத்திலுள்ள பெரும்பாலான அடிமை ஊடகங்கள் உண்மைக்கு மாறாக செய்திகளை திரித்து வெளியிட்டு வருகின்றன.
இதுபோன்ற பொய்யான செய்திகளை வெளியிடுவதின் மூலம், தங்களது செய்திச் சேனலின் தரத்தை தாழ்த்திக் கொள்வதோடு, மக்கள் மத்தியிலும் தேவையில்லாத பதட்டத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்துகின்றன. ஆகவே, இதுபோன்ற பொய்ச் செய்திகளை வெளியிடும் அடிமை ஊடகங்களுக்கு கடிவாளம் போட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், சமானிய மக்களும் வலியுறுத்துகிறார்கள்.
பி.பி.சி. செய்திச் சேனல் வெளியிட்ட வீடியோ….
க்ரீன் ஸ்கிரீன் கிராபிக்ஸை விளக்கும் காட்சி…