நீலகிரி பாரளுமன்ற பாஜக வேட்பாளர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக, பாஜக தொண்டர்களோடு ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
அந்த நேரத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத காவல்துறை தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தடியடியால் காயமுற்ற பாஜக தொண்டர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. இந்த சம்பவத்திற்கு காரணமான ,”ஊட்டி எஸ்.பியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும், அதுவரை போராட்டம் தொடரும் எனவும் கூறியுள்ளார். மேலும் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
தேர்தலில் பாஜக ஜெயித்து, திமுக தோற்று விடுமோ என்கிற பயத்தினால் தான் திமுக அரசு காவல்துறையினரை வைத்து பாஜக தொண்டர்களை தடியடி நடத்தி கலைத்ததாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
https://x.com/karthikgnath/status/1772176689214152852?s=20