உலகின் முதல் கோவிட் நாசி தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் அறிமுகம் குடியரசு தினத்தன்று வெளியிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா எனும் கொடிய நோயை சீனா பரப்பியதாக பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். அதன் காரணமாக, வல்லரசு நாடுகள் முதல் சிறிய நாடுகள் வரை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தன. அந்த வகையில், லட்ச கணக்கான அப்பாவி மக்கள் தங்கள் இன்னுயிரை இழக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. எனினும், அந்த கொடிய நோய் கொடுத்த அடியில் இருந்து பல்வேறு நாடுகள் இன்று வரை மீள முடியாமல் திணறி வருகின்றன.
இந்தியாவில் பா.ஜ.க.வின் ஆட்சி இருந்த ஒரே காரணத்தினால் நோய் தொற்றுக்கான தடுப்பு மருந்து வெகுவிரைவில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வகையில், கோடிக்கணக்கான இந்திய மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டன. இதுதவிர, வல்லரசு நாடுகள் முதல் ஏழை நாடுகள் வரை இந்தியாவின் தடுப்பூசிகளை பெற்று பயன் அடைந்துள்ளன.
இப்படிப்பட்ட சூழலில், உலகின் முதல் கோவிட் நாசி தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், உள்நாட்டு தடுப்பூசி தயாரிப்பாளரான ‘பாரத் பயோடெக்’ நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான கிருஷ்ணா எல்லா, இந்தியாவில் முதன்முறையாக இன்ட்ராநேசல் கோவிட் -19 Incovacc-ஐ வருகிற 26-ந் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த தடுப்பூசி, அரசின் சார்பில் 325 ரூபாய் விலையிலும், தனியார் தடுப்பூசி மையங்களில் ரூ. 800 விலையிலும் கிடைக்கும் என்று அவர் கூறினார்