அட்ராசக்க ! 25 ரூபாய்க்கு பாரத் அரிசி – மத்திய அரசின் அதிரடி !

அட்ராசக்க ! 25 ரூபாய்க்கு பாரத் அரிசி – மத்திய அரசின் அதிரடி !

Share it if you like it

இந்திய மக்களின் முக்கிய உணவான அரிசி விலை தாறுமாறாக உயர்ந்து, இரட்டை இலக்க பணவீக்கத்தைக் கொண்டு இருக்கும் வேளையில், மத்திய அரசு அரசியின் விலையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இதன் படி மத்திய அரசு இனி பாரத் பிராண்டின் கீழ் ஒரு கிலோ அரிசியை 25 ரூபாய்க்கு விற்கும் என்று மூத்த அரசு அதிகாரி தெரிவித்துள்ளார். ஏற்கனவே மத்திய அரசு பாரத் பிராண்டின் கீழ் கோதுமை மாவு மற்றும் பருப்பு ஆகியவற்றை விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது அரிசி விற்பனையைத் துவங்கத் திட்டமிட்டு உள்ளது.

இந்தியத் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (Nafed), தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) மற்றும் கேந்திரிய பந்தர் விற்பனை நிலையங்கள் மூலம் ஒரு கிலோ அரிசியை 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு ஏற்கனவே உணவு பணவீக்கத்தைக் குறைக்கும் திட்டத்துடன் மிகவும் குறைந்த விலையில் கோதுமை மாவு மற்றும் பருப்பு வகைகளைப் பார்த் பிராண்டின் கீழ் விற்பனை செய்தது. நவம்பர் மாதம் தானிய வகைகளின் விலை 10.27% உயர்ந்துள்ளது, உணவுப் பணவீக்கம் நவம்பரில் 8.70% ஆக இருந்தது, முந்தைய மாதத்தில் 6.61% ஆக இருந்தது.

உணவுப் பணவீக்கம் ஒட்டுமொத்த நுகர்வோர் நிதி நிலையைப் பாதிக்கும் காரணத்தால் 2024 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்கு முன்பு மக்களின் அடிப்படை பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் ஒரு கிலோ அரிசியை 25 ரூபாய்க்கு விற்கும் முடிவு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் அதிக அளவில் பயனடைவார்கள்.

இந்திய உணவுக் கழகம் (எஃப்சிஐ) செய்த இணைய-ஏலத்தின் மூலம் வெளிச் சந்தைக்குச் செல்லும் கோதுமை அளவை அதிகரிப்பதன் மூலம் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகிறது. 2024 பொதுத் தேர்தலுக்குத் தயாராகும் அரசுக்கு உணவுப் பொருட்கள் மீதான உயர் பணவீக்கம் ஒரு பிரச்சனையாக இருக்கும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து தக்க முடிவை மத்தியஅரசு எடுத்துள்ளது.


Share it if you like it